ஜெகதீசன் - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : ஜெகதீசன் |
இடம் | : ஈரோடு |
பிறந்த தேதி | : 07-Jun-1985 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 16-Nov-2013 |
பார்த்தவர்கள் | : 153 |
புள்ளி | : 42 |
தமிழ் மடியில் தவழ ஆசையாய்
எழுதுகோல் பிடித்த எண்ணற்ற கவி மைந்தர்களின் வரிசையில்
ஒருவனாய் நிற்கும் ஆசையில்
எண்ணங்கள் எழுகின்ற பொழுதெல்லாம்
எழுத்தாணி பிடிப்பவர்களில் நானும் ஒருவன்.
ஓடி விளையாடு என்று
உற்சாகப்படுத்திய உத்வேகத் தீ !
சாதிகள் இல்லையடி பாப்பா என்று
முழங்கிய சமத்துவத் தீ !
அடிமைத்தனம் கண்டு கலங்கி
கொதித்த ஆவேசத் தீ !
பெண்ணடிமை புதைத்துவிட
வெடித்த புரட்சித் தீ !
இமயம் முதல் குமரி பரவிய
கட்டுக்கடங்காத காட்டுத் தீ !
காக்கை குருவியும் எங்கள் ஜாதி என்று
அன்பு பொழிந்த அற்புதத் தீ !
அறியாமை அகற்ற என்றென்றும்
சுடர் வீசும் அணையாத் தீ !
பகலவனாய் தினம் உதிக்கும்
பாரதத்தின் தீ ! பாரதி !
கால் முளைத்த மலர்களெல்லாம்
தோட்டங்களில் நடமாடுகின்றன ...!
மனிதப்பிறவிக்கு மகளாய் வரம் வாங்கி !
உள்ளத்திற்குள் உருவம் படைத்து
இன்னொரு உயிரை அதற்குள் வைத்து
சாதிவெறி பிடித்த சமூகத்தால்
கல்லறையில் உறங்கும் காதலுக்காய் !
மகிழ்வோடு பேசிப் பேசி
மனதோடு கட்டிக் காத்து
மதவெறி கொண்ட மனிதர்களால்
மணவறை ஏறாத காதலுக்காய் !
காதலெனும் கல்லெறிந்து
கற்பை மட்டும் சுவைத்துவிட்டு
கைவிட்ட கயவர்களால் கரைந்துபோன
பெண்ணினத்தின் கண்ணீருக்காய் !
வீரதீரம் விட்டெரிந்து
காதலுக்காய் கரைந்து கரைந்து
விட்டுப் போன காதலிக்காய்
கண்ணீர் வடிக்கும் ஆணினத்தின் அழுகைக்காய் !
பலகாலமாய் காத்திருக்கிறது அனாதையாய் ஒரு படகு!
சதி மத பேதமற்ற சமூகத்தை சுமப்பதற்காக
ஏமாற்றுதல் இல்லாத இதயங்களை சுமப்பத
உள்ளத்திற்குள் உருவம் படைத்து
இன்னொரு உயிரை அதற்குள் வைத்து
சாதிவெறி பிடித்த சமூகத்தால்
கல்லறையில் உறங்கும் காதலுக்காய் !
மகிழ்வோடு பேசிப் பேசி
மனதோடு கட்டிக் காத்து
மதவெறி கொண்ட மனிதர்களால்
மணவறை ஏறாத காதலுக்காய் !
காதலெனும் கல்லெறிந்து
கற்பை மட்டும் சுவைத்துவிட்டு
கைவிட்ட கயவர்களால் கரைந்துபோன
பெண்ணினத்தின் கண்ணீருக்காய் !
வீரதீரம் விட்டெரிந்து
காதலுக்காய் கரைந்து கரைந்து
விட்டுப் போன காதலிக்காய்
கண்ணீர் வடிக்கும் ஆணினத்தின் அழுகைக்காய் !
பலகாலமாய் காத்திருக்கிறது அனாதையாய் ஒரு படகு!
சதி மத பேதமற்ற சமூகத்தை சுமப்பதற்காக
ஏமாற்றுதல் இல்லாத இதயங்களை சுமப்பத
மல்லிகை சிரிப்பாக
மாம்பூ உறவாக
மாதுளம்பூ நிழலாக
மகிளம்பூ நினைவாக
செவ்வந்தி நிழலாட
செண்பகப்பூ மணமாக
காகிதப்பூ முன்னிலையில்
கனகாம்பர முகவரியாய்
அல்லிப்பூ செண்டாக
அரளிப்பூவில் வண்டாட
அனிச்சம்பூ பதமாக
தாமரைப்பூ முகமாக
தாழம்பூ நிறமாக
ரோஜா இதழாக
ஆவாரம்பூ ஜொலிப்பாக
அத்திப்பூ வனப்பாக
தித்திப்பு கூடி
மகிழ்ச்சிப் பூ பூக்க
அன்புப் பூ சிறக்க
அழகுப் பூ சிரிக்க
வாழ்க்கைப் பூ செழிக்க
வாழ்த்துப் பூ தளிர் என
வணங்கி பூ தூவி
புத்தாண்டை அழைக்கும்
உங்கள் புன்னகை கேட்கும்
இனியவன் !!!.........
யோசிக்க யோசிக்க
யோசனை வந்தது!
யோசித்து முடித்ததும்
வாசனை வந்தது!
யோசிக்கும் முன்னர்தான்
சட்டியில் பால்வைத்தேன்!
யோசனை முயற்சியில்
பால்ஆவி ஆனது!
பால்விட்டுப் போனதால்
சட்டியும் கருத்தது!
தன்நிற மாற்றத்தை
நாற்றமாய் தந்தது!
யோசித்த சிந்தனை
மறந்தேதான் போனது!
வாசனை பொருளுமே
மோசமாய் மணத்தது!
கருமையை விட்டிட
சட்டியும் மறுத்தது!
வெறுமையாய் நின்றிட்ட
எனைப்பார்த்து முறைத்தது!
கால் முளைத்த மலர்களெல்லாம்
தோட்டங்களில் நடமாடுகின்றன ...!
மனிதப்பிறவிக்கு மகளாய் வரம் வாங்கி !