+யோசனையால் வந்த வாசனை+
யோசிக்க யோசிக்க
யோசனை வந்தது!
யோசித்து முடித்ததும்
வாசனை வந்தது!
யோசிக்கும் முன்னர்தான்
சட்டியில் பால்வைத்தேன்!
யோசனை முயற்சியில்
பால்ஆவி ஆனது!
பால்விட்டுப் போனதால்
சட்டியும் கருத்தது!
தன்நிற மாற்றத்தை
நாற்றமாய் தந்தது!
யோசித்த சிந்தனை
மறந்தேதான் போனது!
வாசனை பொருளுமே
மோசமாய் மணத்தது!
கருமையை விட்டிட
சட்டியும் மறுத்தது!
வெறுமையாய் நின்றிட்ட
எனைப்பார்த்து முறைத்தது!