காத்திருக்கிறது காதல் பல காலமாய்

உள்ளத்திற்குள் உருவம் படைத்து
இன்னொரு உயிரை அதற்குள் வைத்து
சாதிவெறி பிடித்த சமூகத்தால்
கல்லறையில் உறங்கும் காதலுக்காய் !

மகிழ்வோடு பேசிப் பேசி
மனதோடு கட்டிக் காத்து
மதவெறி கொண்ட மனிதர்களால்
மணவறை ஏறாத காதலுக்காய் !

காதலெனும் கல்லெறிந்து
கற்பை மட்டும் சுவைத்துவிட்டு
கைவிட்ட கயவர்களால் கரைந்துபோன
பெண்ணினத்தின் கண்ணீருக்காய் !

வீரதீரம் விட்டெரிந்து
காதலுக்காய் கரைந்து கரைந்து
விட்டுப் போன காதலிக்காய்
கண்ணீர் வடிக்கும் ஆணினத்தின் அழுகைக்காய் !

பலகாலமாய் காத்திருக்கிறது அனாதையாய் ஒரு படகு!
சதி மத பேதமற்ற சமூகத்தை சுமப்பதற்காக
ஏமாற்றுதல் இல்லாத இதயங்களை சுமப்பதற்காக
எழில் கொஞ்சும் அழகான காதலின் கரையோரம் !

எழுதியவர் : ஜெகதீசன் (4-Dec-13, 12:19 am)
பார்வை : 101

மேலே