பாரதத்தின் தீ - பாரதி

ஓடி விளையாடு என்று
உற்சாகப்படுத்திய உத்வேகத் தீ !

சாதிகள் இல்லையடி பாப்பா என்று
முழங்கிய சமத்துவத் தீ !

அடிமைத்தனம் கண்டு கலங்கி
கொதித்த ஆவேசத் தீ !

பெண்ணடிமை புதைத்துவிட
வெடித்த புரட்சித் தீ !

இமயம் முதல் குமரி பரவிய
கட்டுக்கடங்காத காட்டுத் தீ !

காக்கை குருவியும் எங்கள் ஜாதி என்று
அன்பு பொழிந்த அற்புதத் தீ !

அறியாமை அகற்ற என்றென்றும்
சுடர் வீசும் அணையாத் தீ !

பகலவனாய் தினம் உதிக்கும்
பாரதத்தின் தீ ! பாரதி !

எழுதியவர் : ஜெகதீசன் (10-Dec-13, 11:42 pm)
பார்வை : 162

மேலே