விட்டுச் செல்வோம்
நாம்
உண்டு உமிழும்
பழங்கள் கூட
விருட்சங்களுக்கான
விதைகளை
விட்டு விட்டு தான்
போகின்றன...!
மீண்டும் மீண்டும்
சுவை தருகின்றன...!
மீண்டும் மீண்டும்
உயிர்க்கின்றன...!
விரும்பியதை
வாழ்ந்து களிக்கும்
நாம் எதை
விட்டு செல்கிறோம்
அடுத்த தலைமுறைக்கு
அரிவாள் சண்டையையா...!
அரிய வகையாகி போன
அகிம்சையையும்
அன்பையுமா...!
ஒரே ஒரு
தலைமுறையோடு
உயிர் துறக்க
விழைகிறோம்...!
உடல் வேகும்
முன் உயிர்
துறக்கிறோம்...!
விட்டு செல்வோம்
மீண்டும் மீண்டும்
உயிர்க்கும்
விசயங்களை
என்றும்
உயிர் வாழ்வோம்...!