VAIRAMUTHU ST - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  VAIRAMUTHU ST
இடம்:  Sivakasi
பிறந்த தேதி :  04-Nov-1981
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  08-Dec-2013
பார்த்தவர்கள்:  284
புள்ளி:  25

என் படைப்புகள்
VAIRAMUTHU ST செய்திகள்
VAIRAMUTHU ST - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Jul-2023 2:16 pm

கண் விழிக்கும்
முன்னே
கதிவரனை
காலி செய்கிறது
உன் அழகு

வியப்பு போலும்
விண்மீன் ஒன்று
விழுந்துவிட்டது
மண்ணுலகில் மரகதமாய்

பாவம்
காத்திருக்கிறான்
கதிரவனும்

தாமரை நீ
கண் மலர்ந்தாள்
தானே
தன பயணத்தை
தொடருவான்
மேற்கு பக்கம்

தூக்கம் களைத்து
தூர அனுப்பு
சூரியனை...
வெண்மேகத்து
வெள்ளை நிலாவும்
கோபித்து கொள்ளும்
உன்னை காணாமல்

மேலும்

VAIRAMUTHU ST - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Sep-2020 10:18 am

தாராளமாக புழங்க
த‌னித் தனி
அறைகள் வேண்டாம்
ஒற்றை குடில்
நெய்யலாம்...
கண பொழுதும்
களைப்பு
இல்லமால்
கண் நோக்கி
காதல் பகிரலாம்...

குடில்
புகும் போது
உன் குளிர் பார்வை
என்னை
வரவேற்க வேண்டும்...
என்
களைப்பை
உன் வரவேற்பு
வாசலோடு
வழி அனுப்ப வேண்டும்...

அன்பில்
அரை வயிறு
நிரப்ப வேண்டும்
காய்ந்த வயிற்றிலும்
காதல் உணர வேண்டும்...
உனக்கென நானும்
எனக்கென நீயும்
உணவை பகிர வேண்டும்...

கால் நீட்டி
கண் அயரும் போது
கனவு காண
நாம்
கைகள் கோர்க்க
வேண்டும்...
சிந்தையில் ஒருமித்து
நம் சிறு பிள்ளை
சிங்கார வேலனாய்
சிரிக்க வேண்டும்...

இரவிலும்
ஒளிர வேண்டும்
அன்பின் பேர

மேலும்

VAIRAMUTHU ST - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Apr-2020 1:44 pm

சுகம் தான்
போலும்
காத்திருப்பதும்
கண்ணே
கருப்பே
உனக்காக...

கருப்பா
நீ உருவானதை
வித்திட்ட
முத்துவிடம்
சொல்ல
காத்திருந்தேன்

அலுவலில்
அயரும் முகம்
இன்று
அரும்புகிறது
குறும்பு செய்ய
கருவாக
நீ
உருவாகியிருக்கிறாய்
என கேட்டு

அந்தி வானம்
அடைந்தாலும்
அயராது
சண்டை இடும்
நாங்கள்
சமாதானம்
கொண்டுள்ளோம்
சந்தோசமாக
கண்ணே பட்டே
என உனை கொஞ்ச

வெட்க
புன்னகை செய்தோம்
நாம்
உன் தந்தை
நமக்களித்த
சத்தம் இல்லா
முத்தம் கண்டு

அதிகரிக்கிறது
ஆசையும் ஆர்வமும்
உனக்கு அழகாக
ஆடை அணிவித்து
பார்க்க

பொதி இல்லை
வலி இல்லை
பொதிகை தென்றல்
போல்
வருடுகிறாய்
என் வயிற்றை
செல்ல

மேலும்

VAIRAMUTHU ST - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Oct-2018 7:01 pm

உன்
நெற்றி வகுடில்
நித்தம் பயணிக்க
ஆசை

ஒற்றை குளியலில்
கார் நிறம் கரைந்து
மாநிறம் ஆக
ஆசை

முத்தமிடும் நேரத்தில்
உன் மூச்சு காத்து
ஸ்வாசிக்க
ஆசை

என் பசித்த
வயிருக்கு பாசமாய் நீ
பருக்கை ஊட்டி விட
ஆசை

நான் அயரும் நேரத்தில்
என் அலுவல்கள்
நீ பார்க்க
ஆசை

நீ கண் அயரும் நேரத்தில்
உன் கால் இடுக்கில்
மாட்டி கொள்ள
ஆசை

குங்குமம் இட்டு
குடில் அழைக்க
ஆசை

உன்னோடு வாழ ஆசை
உறவோடு இணைய ஆசை
கனவிளாவது
கை பிடிக்க ஆசை
அத்தனையும்
அளவில்லா ஆசை

மேலும்

அருமை அருமை உணர்ச்சி பொங்கியது... 23-Oct-2018 12:02 pm
சென்ற வாரத்தின் சிறந்த படைப்புகளின் தொகுப்பு ஒரு பார்வை - எழுத்து.காம்:---தங்கள் படைப்பு தேர்வானதற்கு எழுத்து தள குடுமபத்தினர் சார்பாக பாராட்டுக்கள் தமிழ் அன்னை ஆசிகள் 23-Oct-2018 11:46 am
VAIRAMUTHU ST - VAIRAMUTHU ST அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
19-May-2016 6:28 pm

என் இதயம்
பயணங்கள்
பதிவாகாத
ஒரு வலிப் பாதை!

நீ மட்டும் வசிக்க
விரும்பும்
என் தனிமை சூழ்
தரிசு நிலம்!

என் உள்ளம்
உன்
வருடலுக்கு ஏங்கும்
வறண்ட பூமி!

என்
காதல்
உறக்கம் இல்லாத
உக்கிர கானகம்!

உன்
கரிசனத்தோடு
காதலை கேட்கும்
என் கரிசக்காட்டு பூமி!

உன்
சம்மதம் சாய்க்கும்
என்
தனிமை கோலத்தை
விதைக்கும்
வசந்த காலத்தை!

மேலும்

நன்றி நண்பா! என்னை ஊக்குவிப்பதர்க்கு..... 06-Jun-2016 7:09 pm
காதலின் ஒத்தையடி பாதையில் திசைகள் மட்டும் தான் வேறாகி போகிறது பயணம் ஒன்றே!இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 20-May-2016 6:14 am
VAIRAMUTHU ST - VAIRAMUTHU ST அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
15-Dec-2013 9:16 am

பார்வையாளர்கள் என்பது உறுப்பினர்கள் மட்டுமா அல்லது உறுப்பினர்கள் அல்லாதவர்களுமா? நாம் நம்முடைய கவிதையை பார்த்தாலும் அது பார்வையாளர்கள் கணக்கில் சேருமா? புள்ளி கணக்கு எதை குறிக்கிறது? நம்முடைய படைப்பை அனைவரும் பார்க்க மற்றும் கருத்து கூற என்ன செய்ய வேண்டும். விரிவான விளக்கம் அளிக்கவும். நன்றி.

மேலும்

மிக்க நன்றி நண்பரே! 15-Dec-2013 9:49 pm
பார்வையாளர் என்பது அனைவரும் தான். புள்ளி பார்வையாளர்கள் கவிதைக்கு அளிக்கும் மதிப்பெண்கள். அதிகமான பார்வைகள் கிடைக்க ஒவ்வொரு கவிதைக்கு கீழேயும் facebook like , google + , கவிதை நண்பர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பும் வசதி போன்றவை உள்ளன. 15-Dec-2013 9:30 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (10)

கல்லறை செல்வன்

கல்லறை செல்வன்

சிதம்பரம்
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)

இவர் பின்தொடர்பவர்கள் (10)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவரை பின்தொடர்பவர்கள் (10)

மலர்91

மலர்91

தமிழகம்
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே