கரு

சுகம் தான்
போலும்
காத்திருப்பதும்
கண்ணே
கருப்பே
உனக்காக...

கருப்பா
நீ உருவானதை
வித்திட்ட
முத்துவிடம்
சொல்ல
காத்திருந்தேன்

அலுவலில்
அயரும் முகம்
இன்று
அரும்புகிறது
குறும்பு செய்ய
கருவாக
நீ
உருவாகியிருக்கிறாய்
என கேட்டு

அந்தி வானம்
அடைந்தாலும்
அயராது
சண்டை இடும்
நாங்கள்
சமாதானம்
கொண்டுள்ளோம்
சந்தோசமாக
கண்ணே பட்டே
என உனை கொஞ்ச

வெட்க
புன்னகை செய்தோம்
நாம்
உன் தந்தை
நமக்களித்த
சத்தம் இல்லா
முத்தம் கண்டு

அதிகரிக்கிறது
ஆசையும் ஆர்வமும்
உனக்கு அழகாக
ஆடை அணிவித்து
பார்க்க

பொதி இல்லை
வலி இல்லை
பொதிகை தென்றல்
போல்
வருடுகிறாய்
என் வயிற்றை
செல்ல உதையல்
இட்டு

அலை என
வளை இட்டு
ஆனந்தமாய்
அழுகிறேன்
உன்னை
பிரிகிறேன்
என் உடலில் இருந்து

புதல்வன்
உன் புது மொழி
கேட்டேன்
அழுகையாய்
ஆனந்த
பெருமிதம்
என் ஆடவனின்
புன்முறுவலில்

இனி வாழாத
வாழ்வும்
வாழ போகிறோம்
நீ
பதிக்க இருக்கும்
கால் தடத்தால்
எங்கள் கோகுலத்தில்

எழுதியவர் : வைரமுத்து S T (20-Apr-20, 1:44 pm)
சேர்த்தது : VAIRAMUTHU ST
Tanglish : karu
பார்வை : 42

மேலே