அவளும் நிலவும்

ஒவ்வோர் இரவும்
அவன் வருவானென்று
வழிமேல் விழிவைத்து
கதவோரம் நின்று காத்திருப்பாள்
கன்னியவள் - ஒருமுறைதான்
அவளைப்பார்த்து அவள் உள்ளத்தைத்
திருடிச்சென்ற அவனுக்காக
வளர்பிறையாயும் தேய் பிறையாயும்
நீல வானில் உலாவிவரும் நிலவே
காத்திருக்கும் அவளுக்கு சாட்சி
தனிமையில் கண்ணீர்விடும் அவள்
மௌன ஏக்கத்திற்கு
மாதம் மூன்று கழிந்தும்
அவன் வரவு காணவில்லை
ஆனாலும் தன் நம்பிக்கையில் தளரா அவள்
இன்னும் வீட்டின் கதவோரம் நிலவு படும் ஓரம்
நிலவு இப்போது அவளைக் கேட்டது, ' பெண்ணே
இன்னுமா அவன் வருகையில் உனக்கு நம்பிக்கை
பேல் போய்விடு வேறொருவனை நாடிடு
காதல் உறவாட என்றது
அதற்கவள், ' நான் நிலவல்ல காதலியை மாற்றிக்கொள்ள
என் மனம் கொள்ளைகொண்டவன் நானறிவேன்
வந்திடுவான் ஓர் நாள் என்னுடன் சேர
இது அந்த அன்று அவன் தந்த ஒரே பார்வையில்
அவனிடம் உள்ளம் பறிகொடுத்த நான்
அவன்மேல் சத்தியம் , சொல்வேன் என்றாள்
ஆடிப்போன நிலவு அவள் சத்திய சோதனையை
இப்போது ஆமோதிப்பதுபோல்
அவள் வீட்டு சாளரம் வழியாய் அவளை பார்த்தது
அவள் காத்திருப்பு வீண் போகவில்லை
அதோ வருகின்றான் அவன்
நிலவாய் ஒளி வீசும் அவள் முகம்
ஒளி மங்கிய வான் நிலவு.......!!!!

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (20-Apr-20, 2:56 pm)
Tanglish : avalum nilavum
பார்வை : 175

மேலே