குடில்

தாராளமாக புழங்க
த‌னித் தனி
அறைகள் வேண்டாம்
ஒற்றை குடில்
நெய்யலாம்...
கண பொழுதும்
களைப்பு
இல்லமால்
கண் நோக்கி
காதல் பகிரலாம்...

குடில்
புகும் போது
உன் குளிர் பார்வை
என்னை
வரவேற்க வேண்டும்...
என்
களைப்பை
உன் வரவேற்பு
வாசலோடு
வழி அனுப்ப வேண்டும்...

அன்பில்
அரை வயிறு
நிரப்ப வேண்டும்
காய்ந்த வயிற்றிலும்
காதல் உணர வேண்டும்...
உனக்கென நானும்
எனக்கென நீயும்
உணவை பகிர வேண்டும்...

கால் நீட்டி
கண் அயரும் போது
கனவு காண
நாம்
கைகள் கோர்க்க
வேண்டும்...
சிந்தையில் ஒருமித்து
நம் சிறு பிள்ளை
சிங்கார வேலனாய்
சிரிக்க வேண்டும்...

இரவிலும்
ஒளிர வேண்டும்
அன்பின் பேரொளி...
உதிக்க வேண்டும்
ஒவ்வொரு
விடியலும்
உன் அன்பின்
அரவணைப்பில்...

ஒற்றை அறை
ஓலை குடிலில்
ஒய்யார வாழ்வு
வாழ வேண்டும்...
ஒவ்வொரு நாளும்
அளவில்லா
ஆனந்த கூச்சலிட்டு...

எழுதியவர் : வைரமுத்து S T (2-Sep-20, 10:18 am)
சேர்த்தது : VAIRAMUTHU ST
Tanglish : kkutil
பார்வை : 78

மேலே