என்னவளே எங்கு சென்றாய்
விண்மீன்கள் நடுவிலே
ஒளிரும் நிலவாய் வந்தவளே
இதழ்களால் என்னவோ செய்தவளே
விழிகளால் என்னை எய்தவளே
பூங்குயில் பாஷையால் கொய்தவளே
நெஞ்சை வருடிய தென்றலே
மக்கள் மன்றிலே அன்று எல்லோரும் முன்பிலே
இறக்கை விரிக்காமல் கூடவே
இருப்பேன் எனக் கூறிய அன்றிலே
கண் முன் வாராமல் ஏதும் கூறாமல்
இன்று எங்கு நீ சென்றாய்
நெஞ்சின் எல்லையானவளே
ஏன் எனக்கு தொல்லையானாய்
இன்று போதை வில்லையோடு
ஏனடி மூச்சுக்காற்றைச் சுமக்க வைத்தாய்......
அஷ்றப் அலி