ஒரு தலை காதல்
இத்தனை வருடங்களாக என்
குடும்பதிற்கு மட்டுமே இடம்
கொடுத்து இருந்த என் இதயதில்
நீ எப்படி நுழைந்தாயோ..
நீ வந்த அத்தருணம் இவ்வளவு
மாற்றங்களா....
நீ பேசிய வார்த்தைகள் நீங்கா இடம்
பிடித்தது என் மனதில்..
ஆனால் நான் உன்னுடன் பேச
நினைக்கும் போது என்
வார்த்தைகளும் துணை வரவில்லை
என் மௌனம் புரிந்த உனக்கு....
என் மனம் சொல்ல நினைக்கும் வார்த்தைகள் புரியவில்லையோ.
உன் பாசத்தாலும் அக்கறையாலும் என்னை மகிழ்ச்சியில் ஆழ்தி இந்த உலகத்தை மறக்க செய்தாயடா..
இன்றும் தேவையில்லை, நாளையும் நிறந்தறமில்லை இந்த நொடி மட்டுமே நிஜம் என்று.
இந்த நொடி நீளாத என ஏங்கவைத்தாயடா
நீயும் சொல்லவில்லை நானும் சொல்லவில்லை ..
ஏனெனில் சொல்லும் அளவிற்கு ஒன்றுமில்லை என்று நீ உணர்திய அத்தருணம்
என் கண்களில் நீர் பெறுகெடுத்து ஒட,இதயத்தில் மின்னலும் இடியுமாய் சத்தம் கேட்க
அப்போது உணர்ந்தேன்......
என் கவிதையைப்போல .. அதுவும் என் கற்பனையே என்று.