ஏற்றக் கல்வித்திட்டங்கள் தீட்டுவோம்

ஏற்றக் கல்வித்திட்டங்கள் தீட்டுவோம்...!

காற்று, நீர், நிலம் இவை மூன்றும்
காலதிலை மாற்றத்துடன் உயிர்வாழ அவசியம்
கரிமங்களால் இவை கலங்காது காத்திட
கல்வியில் சுற்றுச்சூழலை கற்றல் அவசியம்

உணவு, உடை, உறையுள் இவை மூன்றும்
உயிர் வளர்த்துப் பேணிட அவசியம்
உலகில் இவை தடையின்றி நிறைவுபெற
உழவு நெசவு செயல்முறை பயிற்சி அவசியம்

தாய்மொழி இலக்கணம் தேவைபடு கணிதம்
தேசப்பற்றுடன் வீரம் வளர்த்திட வரலாறு
உழவுடன் வாழ்வு மேம்பட அறிவியல்
உறுதியாய் போதித்திடல் மிகமிக அவசியம்

அடிப்படை உரிமைகள் கடமைகள்
அரசியல் அமைப்புச் சட்டங்கள்
அனைத்துக்கும் மேலாய் மனிதநேயம் ஒழுக்கம்
ஆரம்பக்கல்வி முதல் புகட்டிடல் அவசியம்

ஆர்வமுள்ள தனிப்பட்ட பிரிவுகளை
அடுத்தக் கட்டமாய் நுழைத்தல் அவசியம்
அதற்கேற்ப தொலைநோக்கு ஆய்வாளர்களை
ஆசிரியர்களாய் நியமித்தல் மிகமிக அவசியம்

நல்லதொரு பாடத்திட்டங்களை தீட்டுவோம்
நல்லாசிரியர்களால் பயிற்சியுடன் பாங்காயதை ஊட்டுவோம்
நாளைய பாரதம் வலுவாய் உருவாகும்
நம் அப்துல்கலாமின் கனவுகள் அன்றே நனவாகும்

கவிதாயினி அமுதா பொற்கொடி

எழுதியவர் : வை.அமுதா (2-Sep-20, 3:37 pm)
பார்வை : 36

மேலே