சங்கு முழங்கிட தென்றலை தூது அனுப்புவேன்

தூரிகையில் தீ கொண்ட உன்
பெயரை எழுதினால் கூட
அவையும் தமிழ் மீது உனக்கு உள்ள
பற்றின் காரணமாக எழுதுகோலும்
தலைவணங்கும்
"பார(தீ)தி"என்ற உந்தன்
பெயரை எழுதும் போது

வளைந்த முதுகினை எழுதுகோலின் முனைகொண்டு எழ
வைத்தவன் யாருண்டு?
எழுதுகோலின் முனை கொண்டு
நீ எழுதிய வார்த்தைகள்
ஒவ்வொரு தமிழனையும்
விடுதலைக்கு தூண்டியவன் நீ !

இப்பொழுது ஏது நான்
சொல்ல என் விடுதலையில்
என் தமிழ் மொழியும்
அழியும் நிலைக்கு
கொண்டுவந்தவர்
யார் இங்கே? - நானே அது

என் தமிழனிடத்தில் தமிழில்
பேசிட தயக்கம் கொள்ளும்
நிமிடம் என் தாய்மொழியை
நானே கொல்லுகிறேன்
என்ன கொடுமை ?

இனி என் தாய்மொழியை
காக்க என் நாவிற்கும்,கைபேசிக்கும்
தமிழினை புகுத்தி ஆங்கிலத்தை
வீழ்த்த முதலில் கட்டளை இட்டிடுவேன் ...

பின்பு எங்கும் அழகிய
தென்றலை தூது அனுப்புவேன் ,
தமிழுக்கு ஈடு ஏதும் இல்லை
என்று சங்கு முழங்கிட ....


ப்ரியாஅசோக்...

எழுதியவர் : ப்ரியாஅசோக் (11-Dec-13, 5:43 pm)
பார்வை : 144

மேலே