ஆண் என்ன பெண் என்ன

மகனைப் பெற்றவள் மக ராசி
அவளைக் கை எடுத்துக் கும்பிடும் மண் ராசி
அளவில்லா மகிழ்ச்சியை தரும் மனராசி
அவளே ஒரு முக ராசி
அவள் ஒரு பேரரசி .

மகளை ஈன்றவள் ஒரு மூதேவி
அவள் வெட்டி சாய்க்கும் ஒரு பெருந்தேவி
மனம் குமறி வெதும்பி அழுகும் சிறு தேவி
அவளே ஒரு பொருந்தாத தேவி
அவள் ஒரு வீண்டிக்கும் தேவி

மகனோ மகளோ என்று விழும் திரை
மகன் என்றால் வெகு நிறை
மகள் என்றாலே படு குறை
பிள்ளையே ஒரு வரம் என்கிறது மறை
குழந்தையே ஒரு மட்டில்லா இன்பம் என்று பறை .

எழுதியவர் : மீனா சோமசுந்தரம் (11-Dec-13, 5:51 pm)
பார்வை : 1466

மேலே