புத்தாண்டு பூக்கட்டும்
மல்லிகை சிரிப்பாக
மாம்பூ உறவாக
மாதுளம்பூ நிழலாக
மகிளம்பூ நினைவாக
செவ்வந்தி நிழலாட
செண்பகப்பூ மணமாக
காகிதப்பூ முன்னிலையில்
கனகாம்பர முகவரியாய்
அல்லிப்பூ செண்டாக
அரளிப்பூவில் வண்டாட
அனிச்சம்பூ பதமாக
தாமரைப்பூ முகமாக
தாழம்பூ நிறமாக
ரோஜா இதழாக
ஆவாரம்பூ ஜொலிப்பாக
அத்திப்பூ வனப்பாக
தித்திப்பு கூடி
மகிழ்ச்சிப் பூ பூக்க
அன்புப் பூ சிறக்க
அழகுப் பூ சிரிக்க
வாழ்க்கைப் பூ செழிக்க
வாழ்த்துப் பூ தளிர் என
வணங்கி பூ தூவி
புத்தாண்டை அழைக்கும்
உங்கள் புன்னகை கேட்கும்
இனியவன் !!!.........