இரவு
நம்மை உறங்கவைத்து
அது விழித்திருக்கும் ...
உடல் முழுக்க
மை பூசியிருக்கும்.....
காமத்தை
கிளறி விடும்....
சாலைகளுக்கு சிறிது
ஓய்வு கொடுக்கும் ....
பயம் மிகுந்தவர்களை
மிரட்டும்....
கயவர்களுக்கு
துணை நிற்கும்....
தெருநாய்களை ஏவி
மனிதர்களை துரத்த செய்யும்....
காதலர்களின் தொலைபேசி அழைப்புகளை
ஒட்டுக்கேட்டபடி அருகிலேயே நிற்கும் ...
தன் நண்பர்களான
நிலவையும் நட்சத்திரங்களையும்
அமாவாசை நாள் தவிர
அத்தனை நாளும்
கூட்டி வரும் ...
சேவல் கூவியதும்
மெல்ல விலகி ஓடி
தூரத்தில் மறையும் .......

