இதயங்கள் உலாவும் இணையதளம்
இது
நவீன காதல்.
உயிர் எழுத்துக்கும்
மெய் எழுத்துக்கும்
உயிர்மை காதல்.
கவிஞனுக்கும்
கவிதைக்கும்
உணர்ச்சி காதல்.
இணைய உலாவியில்
இதயம் உலாவுகிறது
மென்பொருள் குறியீடுகளில்
மனங்கள் புரியப்படுகிறது
காதல் உணர்வுகள்
மின் சமிக்கையில்
பரிமாறப்படுகிறது.
காதல் உரையாடல்
கூகுள் க்ரோம்
பயர் ஃபாக்ஸ்
பூங்காக்களில் அரங்கேறுகிறது.
முகத்தோற்றத்தில் மயங்கி
முளைத்த காதல் இதுவல்ல.
அகத்தோட்டத்தில்
உள்ளப்பூக்களாக மலர்ந்த
உயர்ந்த காதல் இது.
கண்டவுடன் வந்த
கண்மூடித்தனமான காதல் அல்ல
காணாமலே வந்த
கண்ணியமான காதல் இது.
என் உற்ற
நண்பனின் உன்னத காதல்.. !!
டிஜிட்டல் காற்றில்
காதல் ஆக்ஸிஜன்
சுவாசிக்கும்
காதலர்களே...!
விரைவில்
திருமண செய்தியை
மின் அஞ்சலுக்கு
இணைந்து இணைத்து
அனுப்பிடுங்கள்.
வாழ்த்துக்கள்..!!
----------------------------------------------------------------------------
-இரா.சந்தோஷ் குமார்
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
