நகர் வலம்-7
அந்த தங்க தமிழன் மொழி கேட்டு மலைத்து நின்றார் பாரதி
"தமிழரே ,,,,,,,, தங்கள் மக்கள் படும் துயர் தான் என்ன யாம் அறிய விழைகிறோம்"
"பாஞ்சாலி சபதம் இயற்றிய பெருந்தகையே ,
என் மண்ணில் நடு வீதியில் துகில் உரிக்கப்படுகிறார்கள் பல திரவ்பதிகள்,,,,,, இங்கிருந்து ஒரு கிருஷ்ணனும் வரவில்லை புடவை தர
சின்னஜ்சிரார்கள் என்று கூட பாராமல் அங்கே பலியாகுகின்றனர் அந்த வெறி பிடித்த காம நாய்களின் பசிக்கு
என் மண்ணின் மைந்தர்கள் கொல்லப்பட்டு அவர்களின் மனைவிமார்கள் மானம்பங்கபடுத்த பட்டனர்
துப்பாக்கி முனைகளில் துண்டானோர் பல
சுயமரியாதை இழந்து புழுவனோர் பல
இங்கிருந்து கேட்பாறில்லை,,,,,,,
உயிர் விட்டவன் தியாகி
உயிர் மீண்டு வந்தவன் அகதி
இந்த சகோதர சமுதாயம் என் மக்களுக்கு அளித்த பட்டம்
மிருக காட்சி சாலை போல ஒரு மனித காட்சி சாலை காப்பகம் என்னும் பெயரில்
ஊடகத்தின் பார்வையில் மதன மாளிகை தான்
உண்மையில் கழிப்பிடம் எது வாழ்விடம் எது கண்டறிய முடியாமல் தவிக்கின்றனர் என் மக்கள்
தலைவர்களின் வருகை என சிங்காரிக்கபடுகின்ற அறைகள்,,,,,,,,, அவர்களின் பார்வை முடிந்த பின்னர் சட்டென்று மாறுவதேனோ ??
அங்கிருந்த திரவ்பதிக்கு நடு வீதி என்றால் இங்கு வந்த சேர்ந்த திரவ்பதிகளுக்கு தனி அறை அது மட்டுமே வித்தியாசம்
உண்மை அறிந்து கொள்ள யாருக்கும் நேரமில்லை,,,,,,, உண்ணா விரதம் என்னும் ஊமை நாடகம்,,,,,,,,,
அநாதை என்ற சொல்லை அகதி என்று மாற்றி எங்கள் மீது திணிக்கிறார்கள்
அங்கே கேட்கும் ஓலம் இங்கே வந்து சேர்வதற்குள் பல கற்சுவர்கள் அவையே அரசியல் நிர்ணயங்கள்
எல்லாம் சொல்ல நேரமில்லை விடிய போகிறது இந்த பெயர் தாங்கி தமிழனுக்கு
இன்னும் விடியாமல் தவிக்கிறது எங்கள் தமிழீழம்
நான் சென்று வருகிறேன் புலவரே
என் ஆவி காற்றோடு கரையும் முன் கண்டிடுவேனோ ஒரு தமிழனை அவன் உடல் புகுந்து காத்திடுவேனோ என் மக்களை"- அங்கிருந்து நகர்ந்தார் கரிகாலன்
"பழித்தறிவுறுத்தல்
கிளிக் கண்ணிகள்
நெஞ்சில் உரமு மின்றி நேர்மைத் திறமு மின்றி,
வஞ்சனை சொல்வா ரடீ!-கிளியே!
வாய்ச் சொல்லில் வீர ரடீ 1
கூட்டத்திற் கூடிநின்று கூவிப் பிதற்ற லன்றி,
நாட்டித்திற் கொள்ளா ரடீ!-கிளியே!
நாளில் மறப்பா ரடீ! 2
சொந்த அரசும் புவிச் சுகங்களும் மாண்பு களும்
அந்தகர்க் குண்டாகுமோ!-கிளியே
அலிகளுக் கின்ப முண்டோ? 3
கண்கள் இரண்டி ருந்தும் காணுந் திறமை யற்ற
பெண்களின் கூட்ட மடி!-கிளியே!
பேசிப் பயனென் னடீ! 4
யந்திர சாலை யென்பர் எங்கள் துணிக ளென்பர்
மந்திரத் தாலே யெங்கும்-கிளியே!
மாங்கனி வீழ்வதுண் டோ? 5
உப்பென்றும் சீனி என்றும் உள் நாட்டுச் சேலை என்றும்
செப்பித் திரிவா ரடீ!-கிளியே!
செய் தறியா ரடீ! 6
தேவியர் மானம் என்றும் தெய்வத்தின் பக்தி என்றும்
நாவினாற் சொல்வ தல்லால்!-கிளியே
நம்புத லற்றா ரடீ! 7
மாதரைக் கற்பழித்து வன்கண்மை பிறர் செய்யப்
பேதைகள் போலுயி ரைக்-கிளியே
பேணி யிரந்தா ரடீ! 8
தேவி கோயிலிற் சென்று தீமை பிறர்கள் செய்ய
ஆவி பெரிதென் றெண்ணிக்!-கிளியே!
அஞ்சிக் கிடந்தா ரடீ! 9
அச்சமும் பேடி மையும் அடிமைச் சிறும தியும்
உச்சத்திற் கொண்டா ரடீ!-கிளியே!
ஊமைச் சனங்க ளடீ! 10
ஊக்கமும் உள்வலியும் உண்மையிற் பற்று மில்லா
மாக்களுக் கோர் கணமும்-கிளியே!
வாழத் தகுதி யுண்டோ? 11
மானம் கிறிதென் றெண்ணி வாழ்வு பெரிதென்றெண்ணும்
ஈனர்க் குலகந் தனில்-கிளியே!
இருக்க நிலைமை யுண்டோ? 12
சிந்தையிற் கள் விரும்பிச் சிவசிவ என்பது போல்,
வந்தே மாதர மென்பார்!-கிளியே!
மனதி லதனைக் கொள்ளார் 13
பழமை பழமை யென்று பாவனை பேச லன்றிப்
பழமை இருந்த நிலை!-கிளியே!
பாமர ரேதறி வார்! 14
நாட்டில் அவ மதிப்பும் நாணின்றி இழி செல்வத்
தேட்டில் விரப்புங் கொண்டே!-கிளியே!
சிறுமை யடைவா ரடீ! 15
சொந்தச் சகோ தரர்கள் துன்பத்திற் சாதல் கண்டும்,
சிந்தை இரங்கா ரடீ-கிளியே!
செம்மை மறந்தா ரடீ! 16
பஞ்சத்தும் நோய்க ளிலும் பாரதர் புழுக்கள் போல்
துஞ்சத்தம் கண்ணாற் கண்டும்!-கிளியே!
சோம்பிக் கிடப்பா ரடீ! 17
தாயைக் கொல்லும் பஞ்சத்தைக் தடுக்க முயற்சி யுறார்
வாயைத் திறந்து சும்மா!-கிளியே!
வந்தே மாதர மென்பார்!"
- என்ற தன "நடிப்பு சுதேசிகள்" எனும் படலை பாடியபடி கற் சிலையானார் பாரதி
**********************(முற்றும் )*************************