கும்மி பாட்டு புதுசு

கும்மியடி பெண்ணே கும்மியடி
தமிழிலோர் பாட்டு பாடி
கும்மியடி பெண்ணே கும்மியடி ..!!!

சித்திரையும் பொறந்ததடி
சின்ன புள்ள உச்சியில
ஆங்கில
உஷ்ணமும் ஏறுதடி
தணிக்க தமிழிலோர் பாட்டெழுதி
கும்மியடி பெண்ணே கும்மியடி ..!!!

வைகாசில
வைபோகமும் காணலடி
விலைவாசியும் ஏறுதடி
விளைநிலத்தை வீடாக்காம
விவசாயத்தை வளர்த்து
கும்மியடி பெண்ணே கும்மியடி ..!!!

ஆனியில
ஊத காத்தும் வீசலடி
உச்சி வெயிலும் தணியலடி
ஊரோரம் மரமொன்னு நட்டு
கும்மியடி பெண்ணே கும்மியடி ..!!!

ஆடிப்பட்டத்திலே
அரசியல் வெள்ளமும் ஓடுதடி
அதிலே
நல்லதொரு ஆட்சியை விதைத்து
கும்மியடி பெண்ணே கும்மியடி ..!!!

ஆவணியில புது நாத்தும் சாகுதடி
மாசான மண்ணை பொன்னாக்க
மாசெல்லாம் நீக்கி
கும்மியடி பெண்ணே கும்மியடி ..!!!

அகமும் புறமும் அழகாக
புரட்டாசி விரதமெடுத்து
கும்மியடி பெண்ணே கும்மியடி ..!!!

ஐப்பசி அடைமழையும் பொழியலடி
பொழிந்ததெல்லாம் போனதடி வீணாக
சேகரிக்க குளமொன்னு வெட்டி
கும்மியடி பெண்ணே கும்மியடி ..!!!

இல்லத்தில் இன்பம் பொங்கிட
வீடெங்கும்
கார்த்திகை தீபமேகேற்றி
கும்மியடி பெண்ணே கும்மியடி ..!!!

மங்கையரே
மணி எட்டு வரை தூங்காதிங்க
அதிகாலை துகிலெழுந்து
அழகு மார்கழி கோலமிட்டு
கும்மியடி பெண்ணே கும்மியடி ..!!!

தை பிறந்தும்
தமிழினத்துக்கு வழி பிறக்கலடி
போராட
தமிழர்களை ஒன்று திரட்டி
கும்மியடி பெண்ணே கும்மியடி ..!!!

மாசியில் மாலையிட்டு
மறுநாளே பிரியாதிங்க
அன்போடு உறவாடி
ஆனந்தமாக வாழ்வோமென்று
கும்மியடி பெண்ணே கும்மியடி ..!!!

பங்குனி பொறந்ததும்
பழந் தமிழ் பண்பாட்டிலே
ஊரெங்கும் விழாயெடுத்து
தெருவெங்கும் தேரோட்டி

கும்மியடி பெண்ணே கும்மியடி
தமிழிலோர் பாட்டு பாடி
கும்மியடி பெண்ணே கும்மியடி ..!!!

எழுதியவர் : சுதா (5-Dec-13, 9:09 am)
சேர்த்தது : சுதா (தேர்வு செய்தவர்கள்)
பார்வை : 10213

மேலே