எல்லையில் நான்

காலை பனி என் மீது வீச ....
கற்பனையில் என் இதயம் துடிக்க ....
கண்ணில் வந்தாள் என் வசந்தம் மெல்ல.....

வாழ்நாள் எல்லாம் அவளுக்காக ....
வாழ்வதே என்றும் அவளுக்காக .....

குயிலின் குரலை அவளிடம் கேட்டேன் ...
கொஞ்சுவதற்கு நேரமில்லாமல் வந்து விட்டேன்....

என் சாயல் அவள்...
என் உருவம் அவள்...
என் உயிரும் அவள்...
உன் மூச்சும் அவள்....

அவள் சிரிக்கும் சத்தம் கேட்க்கிறேன் ...
அவள் அசைவதை கண்ணில் பார்க்கிறேன் ....

அவள் அழைப்பதை நான் கேட்க்கிறேன் ...
அருகில் அவளிடம் செல்ல ஆசையாய் இருக்கிறேன் ...

ஆயிரம் முத்தங்கள் கொடுத்துவிட்டேன் ...
ஆசையை அவளிடம் சொல்லிவிட்டேன் ....
அவளை அனைத்து கொள்ள போகிறேன் ...
அவள் முகம் காண ஏங்குகின்றேன் ...

அவளை கையில் ஏந்த துடிக்கிறது இதயம் ...
கடமை உணர்வை எழுப்புகிறது ரத்தம் ...

இதயத்தில் நீ இருப்பது நிச்சயமடி ...
நான் இந்தியன் என்பதில் மகிழ்ச்சியடி ......

உன்னை நினைத்து உருகுகின்றேன் ..
என் பாரத தாயின் பிள்ளைகளுக்காக எல்லையில் விழித்திருக்கிறேன் ......

மகளே உன் பிரிவை நினைவில் கொண்டு......
எல்லையில் நிற்கிறேன் இந்தியன் என்று ...

வாடுகிறது என் மனம்....
வசந்தமே உன்னை காண..
என் குழந்தை உன் முகம் காண...
வருத்தத்தை மனதில் கொண்டு வருவதை எதிர்த்து நின்று ...

எல்லையில் நான் .....
சிறு இதயமே உன் பிரிவை எண்ணி .......

எழுதியவர் : சாமுவேல் (5-Dec-13, 5:54 am)
சேர்த்தது : சாமுவேல்
Tanglish : ellaiyil naan
பார்வை : 225

மேலே