வாழ்ந்தென்ன சாதித்தேன்

தனிமையில்
தவித்தேன் சிறுமியாய்
உதவியாயிருந்த
ஒருதுணையும் போனபின்னே!

அன்புகொண்டோர்போல்
அருகில் வந்தார்கள்
அரவணைப்பதுபோல்
அணைத்து விட்டார்கள்!

என்னவோ எப்படியோ
எதுவெள்ளாமோ வாழ்க்கையாகி
எங்கெல்லாமோ பயணம்
எண்ணமில்லாத ஓட்டம்!

உயிர்விடத்துணிவில்லை
உயிர்வாழ்ந்திடும் வேட்கையுமில்லை
உயிர்விடவேண்டியதெல்லாம்
உயிரோடு அலைகிறது!

சிலநல்ல உள்ளங்களும்
இருக்கத்தான் செய்கின்றன
என்னோடு அன்பாகபேச
அனுசரனையாக நடந்துகொள்ள!

முழுமையான நல்லவருமில்லை
முழுமையான கெட்டவருமில்லை
முற்றுமாக துரந்தவருமில்லை
முற்றுமாக உணர்ந்தவருமில்லை!

இதுவேதான் சரியென்று
இதுவரை சொன்னவருண்டோ!
இதுவேதான் நிலையென்று
இதுவரை வென்றவருண்டோ!

தூற்றும் ஆயிரம்பேரிருக்க
போற்ற ஒருசிலர்தானுண்டு!
கைகழுவும் ஆயிரம்பேரிருக்க
கைகொடுக்க ஒருசிலர்தானுண்டு!

சின்னச்சின்ன உதவிகள்
என்னால் முடிந்தது
சில உதவியற்றோர்க்கு
என்னால் முடியும்வரை!

என்வாழ்வு இதுதான்
எவருக்கும் துயரமில்லை!
என்வாழ்வின் வழியால்
எவருக்கும் தடையுமில்லை!

உன்வாழ்க்கை சிறந்தாயிருக்கலாம்
என்வாழ்க்கை சிறந்ததில்லைதான்
போராட்டமே சிறப்பிக்கும்!
போராட்டமே வாழ்விக்கும்!

வாழும்வரையிலும் சிலருக்கு
உதவியாய் இருப்பேன்!
வாழ்ந்தபின்னும் சிலருக்கு
உதவ வழிவகுப்பேன்!

எழுதியவர் : சீர்காழி.சேதுசபா (4-Dec-13, 11:47 pm)
பார்வை : 1051

மேலே