புன்னகையால் எனைத்தாங்கு

கள்ளமில்லா உன்சிரிப்பில்
காண்கின்றேன் தெய்வீகம்.
காட்டுவழிப் போக்கனுக்கு
கண்சிமிட்டும் விண்மீன்நீ

உள்ளத்திலே நீ மழலை
உரைக்கும் மொழி தேனமுதம்.
ஊர்குளத்துத் தாமரைக்கு
உன்முகம்தான் குடியிருப்பு.

வெள்ளத்தில் சுழன்றாடி
விழப்போகும் படகுநான்
வெண்ணிலவு உனைக்கண்டு
வெறுக்கின்றேன் என்முடிவை.

பள்ளத்திலே உருள்பவன்நான்
பனிமலைச் சிகரம்நீ
பாதாளம் போவதற்குள்
புன்சிரிப்பால் எனைத்தாங்கு.

(1975)

எழுதியவர் : இரா. சுவாமிநாதன் (4-Dec-13, 11:45 pm)
பார்வை : 521

மேலே