முட்டாள் தலைமுறை

நண்பர்களுடன்
தேநீர் அருந்தும் போது
கவனம் - தொலைபேசியில் !

நண்பர்களுடன்
கடற்கரையில் நேரம் கழித்த போது
கவனம் - தொலைபேசியில் !

நண்பர்களுடன்
விளையாட்டு மைதானத்தில்
வீரர்களை உற்சாகப்படுத்திய போது
கவனம் - தொலைபேசியில் !

நண்பர்களுடன்
இரவு உணவு அருந்தும் போது
கவனம் - தொலைபேசியில் !

வளர்ந்தது விஞ்ஞானம்!
சுருங்கியது நேரமும், தூரமும்.
கூடவே உணர்வும், உறவும்.
முட்டாள்களின் தலைமுறையில்...

எழுதியவர் : Karthika (5-Dec-13, 8:07 pm)
பார்வை : 72

மேலே