மீண்டும் எப்போது வருவாய்

வெளியே எங்கும் அனுப்பாதே என
அன்னைக்கு கட்டளையிடும் தந்தை
காரணம் என்னுள் உன் வருகை.

எந்த வேலையும் செய்யாதே
என அதட்டும் அன்னை
காரணம் என்னுள் உன் வருகை.

இன்னது செய் இன்னது செய்யாதே
என அறிவுரைகூறும் நட்பு பட்டாளம்
காரணம் என்னுள் உன் வருகை.

பரிதாபமாய் பார்க்கும்
அக்கம் பக்கத்து வீட்டார்
காரணம் என்னுள் உன் வருகை.

சுற்றியுள்ள எல்லோரும் ஒளித்து
வைத்திருந்த பாசம் வெளிவந்தது
காரணம் என்னுள் உன் வருகை.

நன்மைகள் என்னுள் இருந்தபோது மட்டுமல்ல என்னை விட்டு விலகிய பின்னும்
செய்கிறாய்-ஆம் தந்தை வாங்கி வந்தார் பிரியாணி,
காய்ச்சல் கண்ட வாய்க்கு நலதென்று
மீண்டும் எப்போது வருவாய் காய்ச்சலே?

எழுதியவர் : bhuvanamutukrishnan (5-Dec-13, 8:12 pm)
பார்வை : 117

மேலே