விடுதலை மூச்சு

கார்த்திகை மாதம் வேர்த்திடா நேரம்
கதிரவன் ஒருவன் தோன்றினான்
போர்த்திறன் கொண்ட புலிமகன் - வல்வை
கடற்கரையோரம் கால் ஊன்றினான்
இனத்துக்கு நேர்ந்த இடரழித்தான் - நாங்கள்
இன்புற்று வாழவோர் நாடமைத்தான்
வனத்துக்குள் வந்த பகையழித்தான் - தமிழ்
வாழட்டும் என்றவன் வாளெடுத்தான்
கண்ணுக்கு இமையான காவலனே - தமிழ்
மண்ணுக்கு மழை தந்த கார்முகிலே
விண்ணுக்கு நிகரான வீரியனே - எங்கள்
விடிகாலை வானத்து சூரியனே
எங்கேயோ இருந்தெம்மை அசைக்கின்ற காற்று
நீதானே தலைவா எம் விடுதலை மூச்சு
சங்கோடு தவில் மேளம் தப்பட்டை கொண்டு
தலைவனே உனை வாழ்த்தி பாடுறோம் பாட்டு
இன்றைக்கு உனக்ககவை ஐம்பத்தியொன்பது
அண்ணனே உம்மை நாம் எப்போது காண்பது?
என்றைக்கும் எமக்காக சுழல்கின்ற பூமி
ஐயனே! நீ நாங்கள் கும்பிடும் சாமி.