காற்று

காற்றை அசைத்து
மலைமுகடு நோக்கி
பயணித்துக் கொண்டிருந்தது
அந்தப் பறவை...

தொட்டுவிடுமெனப் பார்த்திருந்தேன்
சற்றே முன்னிருந்த
தென்னையை இலக்காக்கி
இறங்கியது காற்றிலிருந்து...

இனி
காற்றில் அசைவில்லை...

எழுதியவர் : அகிலா (7-Dec-13, 7:47 am)
பார்வை : 373

மேலே