yazhavan - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : yazhavan |
இடம் | : திருகோணமலை ,இலங்கை . |
பிறந்த தேதி | : 07-Aug-1978 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 12-May-2012 |
பார்த்தவர்கள் | : 263 |
புள்ளி | : 39 |
மஞ்சள் நிற காகமொன்று
வந்தமர்ந்தது
சிவப்பு நிற பலாமரத்தில்
நீலநிறப்பூனையொன்று
விரட்டிப்போனது
பச்சைநிறத்திலான
எலியொன்றை
நாவல்நிற மண்ணில்
பூத்திருந்த பூக்களின் நிறத்திற்கு யாதொரு பெயருமில்லை
தண்ணீரில் நீந்தத் தெரியாத
சில மீன்கள்
தரையால் நடந்துவந்துகொண்டிருந்தன
தூய வெள்ளை நிறத்தினாலான தோலையுடைய வாழைப்பழத்தை
தன் கருவில் வளரும் சிசுவுக்கு ஊட்டிக்கொண்டிருந்தாள்
ஒரு மூதாட்டி
பலவர்ணங்களில் சிந்திக்கொண்டிருந்தது
அதோ அந்த விபத்தில் இறந்துபோனவர்களின்
இரத்தம்
சிலந்தி வலையில் கட்டப்பட்டிருந்த வாளியில்
சிலர் நீர் இறைத்துக்கொண்டிருந்தனர்
அருகில்
மிக அருகில்
இலக்கியவாதிகள
30.10.1995
நான் பூத்திருந்த முற்றத்திலிருந்து தூக்கி வீசப்பட்டு இன்றுடன் இருபதென்றானது வருடம் !
காவலர்களையும் மீறி
எங்கள் எல்லைகளுக்குள் எமதூதுவர்கள் புகுந்து இரண்டு தசாப்தங்கள் நிறைந்து போனது இன்றுடன் !
ஊர்களை விழுங்கி பசியாறியபடி வந்தன சந்திரிகாவின் ஊத்தைப்பேய்கள்
பலாலி,தெல்லிப்பழை
சுன்னாகம், மருதனார் மடம்,கோப்பாய் ,
நீர்வேலி வரை வந்தன
நீசர்படைகள்
ஒற்றைவழிச்சாலையை
ஓரிரவுக்குள் கடந்தாகவேண்டும்
செம்மணி கடந்து
நாவற்குழி தாண்டவில்லையெனில்
அம்மணி படைகளிடம் அகப்பட்டு விடுவோமென
காவற்தெய்வங்கள் எச்சரித்தன எம்மை!
திருநெல்வேலியும்
திருட்டுப்போகப்போகிறதென பத்திரகாளிக்கும்
நல்லூர் ந
ஷெல் விழும் !
தேசம் ஒருதரம்
ஆடி அடங்கும்
வெடியோசைகள்
தூரத்தில் கேட்கும்
பத்து,பதினைந்து
அண்ணன்மார் வரிச்சீருடையில்
எம்மை கடந்து போவார்கள்
இரவு பயங்கரமானதாக மாறும்
நீண்ட நேரத்தின் பின்
வெடியோசைகள் அடங்கும்
எம்மை கடந்து போனவரில்
சிலரது புகைப்படங்களை
காலை தினசரியில்
வீரமரண அறிவித்தலில் காணலாம்
என்ன செய்கிறோம் என
தெரியாத சிறுபராயத்திலும் கூட
எமக்காய் இறந்தவர்களை நினைந்து அழுவோம்
வித்துடல்கள்
விதைகுழிக்குள் போகும்போது
விம்முவோம்
நல்லூர் முருகன்
கொடியேறும்
நாங்களும் அழகாவோம்
எல்லாம் மறந்து
வீதியுலா வருவோம்
மீண்டும் வெடியோசைகள்
தூரத்தில் கேட்கும்
சிங்கள விமானங்கள
ஷெல் விழும் !
தேசம் ஒருதரம்
ஆடி அடங்கும்
வெடியோசைகள்
தூரத்தில் கேட்கும்
பத்து,பதினைந்து
அண்ணன்மார் வரிச்சீருடையில்
எம்மை கடந்து போவார்கள்
இரவு பயங்கரமானதாக மாறும்
நீண்ட நேரத்தின் பின்
வெடியோசைகள் அடங்கும்
எம்மை கடந்து போனவரில்
சிலரது புகைப்படங்களை
காலை தினசரியில்
வீரமரண அறிவித்தலில் காணலாம்
என்ன செய்கிறோம் என
தெரியாத சிறுபராயத்திலும் கூட
எமக்காய் இறந்தவர்களை நினைந்து அழுவோம்
வித்துடல்கள்
விதைகுழிக்குள் போகும்போது
விம்முவோம்
நல்லூர் முருகன்
கொடியேறும்
நாங்களும் அழகாவோம்
எல்லாம் மறந்து
வீதியுலா வருவோம்
மீண்டும் வெடியோசைகள்
தூரத்தில் கேட்கும்
சிங்கள விமானங்கள
வென்றாக வேண்டிய தீர்ப்பு - இது
வந்தாக வேண்டிய தீர்ப்பு
கொண்டாட வேண்டிய தீர்ப்பு - தமிழ்
கண்டாக வேண்டிய தீர்ப்பு
எனது உயிரே மீண்டதாக எண்ணி மகிழ்கின்றேன் - இறைவன்
தனது பணியை நன்றே செய்தான் என்று துதிக்கின்றேன்.
வாழும் கதாநாயகர் வழங்கிய தீர்ப்பு-இது
ஆளும் அரசுக்கடிபணியாத் தீர்ப்பு
சாகும் நிலையறுத்த சரித்திர தீர்ப்பு - தமிழ்
சந்ததி போற்றிடும் சத்தியத் தீர்ப்பு
எனது உயிரே மீண்டதாக எண்ணி மகிழ்கின்றேன் - இறைவன்
தனது பணியை நன்றே செய்தான் என்று துதிக்கின்றேன்.
ஊரும்,உலகமும் போற்றிடும் தீர்ப்பு - மூன்று
உன்னதவான்கள் வழங்கிய தீர்ப்பு
யாரும் எதிர்பார்த்திடா தீர்ப்பு- நீதி