வாழும் கதாநாயகர் வழங்கிய தீர்ப்பு
வென்றாக வேண்டிய தீர்ப்பு - இது
வந்தாக வேண்டிய தீர்ப்பு
கொண்டாட வேண்டிய தீர்ப்பு - தமிழ்
கண்டாக வேண்டிய தீர்ப்பு
எனது உயிரே மீண்டதாக எண்ணி மகிழ்கின்றேன் - இறைவன்
தனது பணியை நன்றே செய்தான் என்று துதிக்கின்றேன்.
வாழும் கதாநாயகர் வழங்கிய தீர்ப்பு-இது
ஆளும் அரசுக்கடிபணியாத் தீர்ப்பு
சாகும் நிலையறுத்த சரித்திர தீர்ப்பு - தமிழ்
சந்ததி போற்றிடும் சத்தியத் தீர்ப்பு
எனது உயிரே மீண்டதாக எண்ணி மகிழ்கின்றேன் - இறைவன்
தனது பணியை நன்றே செய்தான் என்று துதிக்கின்றேன்.
ஊரும்,உலகமும் போற்றிடும் தீர்ப்பு - மூன்று
உன்னதவான்கள் வழங்கிய தீர்ப்பு
யாரும் எதிர்பார்த்திடா தீர்ப்பு- நீதி
யாகம் செய்ததால் வந்ததித் தீர்ப்பு
எனது உயிரே மீண்டதாக எண்ணி மகிழ்கின்றேன் - இறைவன்
தனது பணியை நன்றே செய்தான் என்று துதிக்கின்றேன்.
ஊரறியாமலே உறங்கிய தீர்ப்பு - இன்று
உலகத்தின் பார்வையில் விழுந்த தீர்ப்பு
பேரறிவாளன்,முருகன்,சாந்தன் - மூவர்
பெருவாழ்வு வேண்டி வந்ததித் தீர்ப்பு
எனது உயிரே மீண்டதாக எண்ணி மகிழ்கின்றேன் - இறைவன்
தனது பணியை நன்றே செய்தான் என்று துதிக்கின்றேன்.
எப்போ வருமென எதிர்பார்த்த தீர்ப்பு-அந்த
இந்திரா மருமகள் எதிர்த்த தீர்ப்பு
இப்போ இது திருத்திய தீர்ப்பு - இனி
என்றும் தமிழன் மறந்திடா தீர்ப்பு
எனது உயிரே மீண்டதாக எண்ணி மகிழ்கின்றேன் - இறைவன்
தனது பணியை நன்றே செய்தான் என்று துதிக்கின்றேன்.
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்