!!!மெட்டி ஒலி!!!

நாணத்தால் நீ தலை குனிய
அம்மி மிதித்து அருந்ததி பார்த்து
அக்கினி சாட்சியாய் திருமண பந்தத்தில்
உனக்கு நான் அணிந்த
அன்பின் அடையாளம் மெட்டி

என் நினைவுகள் மெல்லமெல்ல
என்னை விட்டு போகையிலும்
என் காதுக்குள் எழிசைகீதமாய்-உன்
மெட்டி ஒலியின் ஓசைதான்

இளமையின் வேகத்தில்
மோகத்தில் நான் உன்னை தீண்டையிலும் -என்
உணர்வுக்கு பதில் சொல்லும் -உன்
மெட்டியின் ஓசைதான்

சிலுசிலுக்கும் இரவில் -நான்
சிற்றுறக்கம் கொண்டாலும்-என்
உணர்வுகளை தூண்டும்-உன்
மெட்டி ஒலியின் ஓசைதான்!!

எழுதியவர் : நவநீதன்(முல்லைநீதன்) (30-Jan-11, 5:35 am)
சேர்த்தது : navaneethan navaratnam
பார்வை : 966

மேலே