!!!ஏன் இந்த வாழ்வு?!!!

ஏன் இந்த வாழ்க்கை என்று
நெஞ்சம் நொறுங்கி போனேன்
நீ இல்லாத வாழ்வெனக்கு
துடுப்பில்லா படகானதடி

கண்ணுக்குள்ளே நீ
கனவாகி போனாய் -என்
இதயத்தில் நீயோ
நிறைவாகி போனாய்

உயிருக்குள் நீ
உறவாடி போனாய்-என்
உடலுக்குள் நீயோ
உயிராகி போனாய்

மனசுக்குள் மத்தாப்பு
உன்னை நினைக்கையில்-அது
நொடியினில் கலையுது-உன்
பிரிவை நினைக்கையில்

நானாக நான் இல்லை
உறவாட நீ இன்றி
தினம் தோறும் ஏங்குகிறேன்
நீ இல்லாமல்
ஏன் இந்த வாழ்வென்று?





எழுதியவர் : நவநீதன் (முல்லைநீதன்) (30-Jan-11, 5:38 am)
சேர்த்தது : navaneethan navaratnam
பார்வை : 554

மேலே