வளர் பிறை -11

குணசேகரன் எவ்வளவு சொல்லியும் ஜோதி கேட்பதாக இல்லை

தவிர அவள் மாற்று சான்றிதழ் வாங்கிவிட்டு வந்தமையால் குணசேகரனுக்கு வேற வழி இல்லை,,, எனவே ஜோதியை அவர் வேலை செய்யும் பள்ளியிலேயே சேர்த்து விட்டார்

அவளை தினகரன் நெருங்காதபடி பார்த்து கொள்ள வேண்டும் மிக எச்சரிக்கையாக இருந்தார்..,,,


ஜோதிக்கு முதல் நாள் வகுப்பு,,,, புது இடம் புது நண்பர்கள் என்றில்லாமல் எல்லாருடனும் நட்போடு பழகினாள் ஜோதி

அவளை அனைவருக்கும் பிடித்து போனது,,,,

எல்லாம் சரியாக இருக்கிறது,,,, ஆனால் குணசேகரன் மனம் மட்டும் ஒரு குற்ற உணர்விலேயே இருந்தது,,,,, அது ஜெனியின் கொலைக்கு தானும் உடந்தையாக இருக்க நேரிட்டுவிட்டதே என்பது தான்,,,,

நாட்கள் சென்று கொண்டிருந்தது,,,,,

ஒரு நாள் ஜோதி பள்ளியில் எழுதிக்கொண்டிருந்தாள்,, அவளின் பேனா மை தீர்ந்து போனது

"பிரியா"- தன் தோழியை அழைத்தாள் ஜோதி

"என்ன ஜோ"

"pen வச்சிருக்கியா"

"ஒன்னு தான் டி இருக்கு ஏன் "

"இன்க் தீந்துடுச்சு டி"

"அப்ப ஒன்னு செய் நம்ம staff ரூம்ல இன்க் பாயிண்ட் இருக்கு போய் போட்டுக்கோ"

"நீயும் வாயேன்"

"உனக்கு எல்லாத்துக்கும் துணை வேணுமே,,,, சரி இரு வரேன்"

இருவரும் கிளம்பினார்கள்,,,, staff ரூமில் ஒரு ஆசிரியரும் இல்லை எல்லாரும் வகுப்பிற்கு சென்று விட்டார்கள்,,

"என்ன டி யாருமே இல்ல"

"வசதிதான் போய் சீக்கிரம் இங்க போட்டு வா"

உள்ளே சென்றாள் ஜோதி,,,,,,


யாரோ அவளை உரசியது போல ஒரு உணர்வு,,,,, திடுக்கிட்டு திரும்பினாள்,,,

யாருமில்லை,,,,,,,,, தனக்கு பிரம்மை என நினைத்து கொண்டாள்


பேனாவில் இன்க் நிரப்ப ஆரம்பித்தாள்,,,, ஒரு முறை,,,, இரண்டாம் முறை.,,,, மூன்றாம் முறை,,,,,



"பளார்,,, பளார்,,,, பளார்,,,," -யாரையோ அறையும் சத்தம்,,,

சட்டென்று கதவுகள் மூடிக்கொண்டன,,,

ஜோதி சென்று கதவை இழுத்து பார்த்தாள்,,,, ம்ஹும் நன்றாக மூடிக்கொண்டது,,,,


"என்ன விட்டுட்டு,,,,, என்னை விட்டுட்டு"-- யாரோ கதறும் அலறல் ஒலி ஜோதியின் காதுகளில் விழுந்தது

மேஜை மேலிருந்த காகிதங்களெல்லாம் ஒட்டு மொத்தமாக பறக்க ஆரம்பித்தன

இங்கு என்ன நடக்கிறது,,,,,,,, யார் அழுகிறார்கள்,,,,,,,

எதுமே புரியாமால் தவித்தாள் ஜோதி

திடீரென அவளை யாரோ பிடித்து தள்ளியது போல ஒரு உணர்வு

கிழே விழுந்தாள்,,,,, ஜெனி விழுந்தாளே அதே இடத்தில்,,,,,,,

ஜோதியின் மீது இப்போது யாரு ஏறி அமர்ந்தது போல உணர்ந்தாள்,,,,, கைகளையும் கால்களையும் வீசினாள்

அங்கே ஜெனியில் செயின் அவள் கையில் சிக்கியது,,,,,,,,


"ஹே என்ன டி பண்ற இன்னும்"

ஜோதியின் தோளை தட்டினாள் பிரியா

கனவிலிருந்து எழுந்தது போல உணர்ந்தாள் ஜோதி,,,,

கதவுகளை பார்த்தாள்,,,, திறந்து இருந்தது,,,,, மேஜை காகிதங்கள் எல்லாம் அடுக்கியது அடுக்கியபடி இருந்தது

சாதாரண பள்ளியின் ஓசை மட்டுமே,,, அங்கே அலறல் ஒலி இல்லை,,,,, அடிக்கும் ஓசை இல்லை

"இதெல்லாம் கனவா????? இப்படியும் கனவு வருமா???"- குழம்பி தவித்தாள் ஜோதி


"ஹே என்ன டி நான் பாட்டுக்கு கேட்டுட்டு இருக்கேன் நீ எதுமே பேசாம இருக்க,,, என்னாச்சு இன்க் போட்டியா இல்லையா"

நினைவிலிருந்து நிதானத்திற்கு வந்தாள் ஜோதி,,,

"ம்ம் போட்டுட்டேன்,,, ப்ரியா"

"ம்ம் என்ன டி"

"நீ இவ்ளோ நேரம் இங்கதான இருந்த??"

"ஆமா,,, ஏன் கேக்குற??"

"இல்ல அந்த கதவு திறந்து இருந்துச்சா?? இல்ல மூடி இருந்துச்சா??"

"என்னது என்ன டி லூசு மாதிரி கேக்குற ஸ்கூல் டைம்ல எப்படி சாத்துவாங்க,,,,,,,, சரி வா போலாம்,,, டைம் ஆச்சு அப்புறம் அந்த பத்திர காளி வந்தா நாம காலி" -தனது வகுப்பாசிரியை பற்றி சொல்லி ஜோதியை அழைத்தாள் பிரியா


ஜோதி இங்கு நடந்ததெல்லாம் எதோ பிரம்மை என்றெண்ணி பிரியாவுடன் வகுப்பு நோக்கி நடந்தாள்

இரண்டடி நடந்திருப்பாள்,,,,,,,,, அவள் சட்டை பையில் எதோ கணம் உணர்ந்தாள்

என்ன இது கையில் எடுத்து பார்த்தாள் "ஜெனியின் செயின்",,,,,,,,,,,,


(வளரும்,,,,,,,,,,,)

எழுதியவர் : நிலா மகள் (11-Dec-13, 5:35 pm)
பார்வை : 184

மேலே