வளர் பிறை -10

ஜெனியின் வீட்டில் விசாரணை முடிந்தது,,,,, வந்திருந்த எல்லாரும் சென்று விட்டார்கள்,

ரகு காவல் நிலையத்தில்,,,,,,, விசாரணைக்காக அழைத்து செல்ல பட்டிருந்தான்,,,

நாட்கள் நகர்ந்து கொண்டே போனது,,,,, ஜெனியின் அண்ணனும், அப்பாவும் தங்கள் மகளின் நிலை கேட்டு காவல் நிலையத்திற்கு அலைந்து கொண்டிருந்தனர்,,,,

அவர்களுக்கு அங்கு எந்த மரியாதையும் இல்லை, சரியான பதிலும் இல்லை

ஜெனியின் வழக்கு ஒரு வெடிக்காத வெடிகுண்டாக தூங்கி கொண்டிருந்தது,,,

ஆண்டுகள் இரண்டானது,,,,,,,,


ரயில்வே ஸ்டேஷன்,

தன் பெட்டி படுக்கையோடு வந்து இறங்கினாள் ஜோதி

அந்த மலை பிரதேசத்தின் குளுமை அவளை மயக்கியது

"what a beautiful place "- அழகை ரசித்தபடி தன் தந்தையின் வரவிற்காக காத்திருந்தாள் ஜோதி,,,

"ஜோதிம்மா"

அழைப்பு கேட்டு திரும்பி பார்த்தாள்,,,, குணசேகரன் அந்த பள்ளி வாட்ச்மேன்,

"அப்பா"

கண்களின் சந்தோசம் மிளிர தந்தையிடம் ஓடி வந்தாள் ஜோதி

"எப்படி மா இருக்க"

"ம்ம் நல்ல இருக்கேன் அப்பா,,, நீங்க அம்மா தம்பிலாம் எப்படி இருக்கீங்க"

"எல்லாரும் நல்ல இருக்கோம்,,,,, அதன் எல்லாரையும் பாக்க போறியே,,, சரிமா அத்த வரலையா,,,"

"வந்துருகாங்கப்பா,,,, அதோ"

"வா அக்கா"

"வரேன் டா எப்படி இருக்க,,,,, எப்ப உன் பொண்ணு ஊருக்கு கிளம்பனுன்னு என்ன ரகள பண்ணிட தெரிமா"

"அதெல்லாம் வீட்டுல போய் பேசிக்கலாம் அக்கா,,, வா "- அழைத்து சென்றார் குணசேகரன்


வீட்டிற்க்குள் வந்தாள் ஜோதி,

"அம்மா"

"அடடே வா ஜோதி வாங்க அண்ணி"

"வரேன் மா"

"என்ன ஜோதி எப்படி இருக்க"

"ம்ம்ம் வீட்டுக்கு வந்தாதான் இந்த பாசமெல்லாம் 2 வருஷமா நான் எப்படி இருக்கேன்னு கொஞ்சமாவது கவலை இருந்துச்சா உனக்கு"-அம்மாவிடம் வந்ததும் கோபம் காட்டினாள் ஜோதி

"நான் என்ன மா பண்ண உன் அப்பா தான் உன் படிப்புக்காக உன்ன உன் அத்த வீட்டுல விட்டுடாரு"

"ஏன் இந்த ஊர்ல தான் ஸ்கூல் இருக்கே,,, தவிர அப்பா தான் அந்த ஸ்கூல் வாட்ச்மேன்,,, என்ன ஏன் வெளிய அனுப்பனும்

"இதே கேள்வியத்தான் நானும் உன் அப்பாக்கிட்ட கேட்டுட்டு இருக்கேன் ஆனா ஒரு பதிலும் இல்லை "

"அதெல்லாம் எனக்கு தெரியாது,,,,,,, நான் இனி உங்கள பிரிஞ்சி இருக்க மாட்டேன்,,,,,,"


"இப்போ அதுக்கு என்ன பண்ண போற"- சற்று கோபமாகவே கேட்டார் குணசேகரன்

"நான் இங்க இருக்குற ஸ்கூல்-ல தான் +2 படிக்க போறேன்,,, tc கூட வாங்கிட்டு வந்துட்டேன்"

பெரிய குண்டை தூக்கி போட்டாள் ஜோதி

குணசேகரனுக்கு மனதில் பயம் கரையானை அரிக்க ஆரம்பித்தது




(வளரும்,,,,,,,,,)

எழுதியவர் : நிலா மகள் (11-Dec-13, 1:27 pm)
பார்வை : 191

மேலே