ஒரு கூட்டு பறவைகள்

என் அறை தோழியே;

எங்கிருந்தோ வந்தோம்;
நான் தெற்கிலிருந்து,
நீ வடக்கிலிருந்து;

ஏதேதோ பேசினோம்;
என் மொழி நீ அறியவில்லை,
உன் மொழி எனக்கு புரியவில்லை;

எங்கேயும் சுற்றி திரிந்தோம்;
என்றும் ஒன்றாகவே,
சகோதரிகள் போலவே;

சொந்த ஊர் காத்திருக்க;
வேலைகள் அங்கு நிறைந்திருக்க,
திரும்ப வேண்டும் இருவரும்;

இனி
என்று பார்ப்பது?
என்று பேசுவது?
என்று சுற்றுவது?
ஒரு கூட்டு பறவை போலவே??

எழுதியவர் : தேவி (11-Dec-13, 7:38 pm)
பார்வை : 296

மேலே