யார்
யார் …
பொழுது புணரும் வேளையில் வைர கல்லை மேகத்திற்குள் ஒளித்து வைத்தது யார் ?
யமுனை நதிக்கரையில் மார்கழி மாதத்தில் தாஜ் மஹால் ஐ பனி துளிக்குள் ஒளித்து வைத்தது யார் …?
வெயில் அடித்து மழை பெய்யும் வேளை வானுக்கு 7வண்ண சேலை கட்டிவிட்டது யார் …?
பௌர்ணமி இரவில் மேகங்கள் விளையாட வெள்ளி பந்தை அங்கு தந்தது யார் …?
காற்று மூங்கில் காடை துளைத்து செல்ல,அதை கீதமாக மாற செய்தது யார் …?
கரையில் இருக்கும் சங்கில்,கடலின் ஓசையை புகுத்தியது யார் …?
இத்தனை அழகை கொண்டுள்ள என் இயற்கை தோழியின் அழகை வர்ணிக்கும் கவிஞன் யார் ?
கவிஞன் யார் !!!!

