எப்போது மாறப்போகிறோம்

எங்கள் இளைஞர்களுக்கு அரசியலை பற்றி
டீக் கடையில் நின்று பேசத்தெரியும் - ஆனால்
கொடிபிடித்தே நாட்களை தொலைப்போம்...?!

என் நாட்டில் மக்களாட்சி என்போம்-ஆனால்
இலவசங்கள் என்றால்
எங்கள் உரிமையையும் விற்று
முடிந்தால் நாட்டையும் விற்று விடுவோம்...?!

நாங்கள் கலாச்சாரத்தைப் பற்றி
பேசிக் கொள்வோம் - ஆனால்
ஜீன்சைதான் விரும்பி அணிவோம்...?!

நாங்கள் வீரத்தை பற்றி
காளைகளோடு பேசுவோம்-ஆனால்
அநீதிகளைப் பார்க்கும்போது
கைகட்டி சுவரோரம் சாய்ந்து
வேடிக்கை பார்ப்போம்.....?!

நாங்கள் உரிமைகளுக்காகப் போராடுவோம் - ஆனால்
எங்கள் தேவை முடிந்ததும்
வேலையைப் பார்க்க போய்விடுவோம்...?1

எங்களுக்கு நாட்டை ஆள நல்லதலைவர்கள் வேண்டும் - ஆனால்
காசுக்காக வாக்கை விற்றுவிடுவோம்...?!

எங்களுக்கு கலப்படம் இல்லாத
உணவு வேண்டும் - ஆனால்
கலப்படம் கலந்தால்
தெரியாததை போல் இருந்துவிடுவோம்...?!

எங்கள் வீட்டு பெண்ணுக்கு அநீதி நடந்தால்
போராடுவோம்..
அழுது கூப்பாடு போட்டு நியாம் கேட்க
கொடி பிடிப்போம் -ஆனால்
எங்கோ ஒரு தங்கைக்கு நடந்தால்
செய்தியாகவே பார்ப்போம்..................?!

எங்களுக்கு எல்லாம் தேவை- ஆனால்
உடல் வலிக்க கூடாது
வேர்வை சிந்தக்கூடாது!
எப்படியாவது கிடைக்க வேண்டும்!!!
.....ம்ம்... மனிதா!!
உன் சமுதாயத்திருக்கு
என்ன தேவை உனக்கு தெரியுமா ??

நேற்று பல உயிர்களை நீத்துக் கொடுத்து
போராடி வாங்கிய பூமி இது..
தன்மான பூமியில் பிறந்து
இன்று உன்னை கூட உன்னால் பார்த்து கொள்ள
முடியவில்லையே மனிதா...!!
உண்மையில் பரிதாபப் படவேண்டும்- ஆனால்
நாம்தான் குறைசொல்லியே பழகிவிட்டோமே!
அரசியல்வாதிகளை
சமுதாயத்தை
மற்றவரை....
எப்போது உணர போகிறோம்?
நாம்தான் அந்த
சமுதாயமாக
அரசியல் வாதியாக
தேர்ந்தெடுக்கும் ஒரு பிரஜையாக..............

உன்னையே கேட்கிறேன்
தன்னைச் சுற்றி அத்தனையிலும்
மாற்றம் வேண்டுமென நினைக்கிறாயே!
எப்போது நீ மாற போகிறாய்,
வேடிக்கை பார்ப்பதிலிருந்து
சமுதாய வேட்கை கொண்டவனாக..........????!!!

எழுதியவர் : சபரி ஷீபா (13-Dec-13, 2:10 pm)
பார்வை : 203

மேலே