காதலென்னும் சோலையினில்22

இரவு உணவை முடித்து விட்டு சிறிது நேரம் அமர்ந்து அனைவரும் பேசிக்கொண்டிருந்தனர் அப்புறம் குழந்தையை அத்தை பார்க்கிறேன் நீ போய் தூங்குமா என்று சொல்லி கவிதாவை அனுப்பி வைத்தாள் அத்தை.


தன் குழந்தையை தனியாக விட்டு செல்ல கஷ்டமாக தான் இருந்தது இருந்தாலும் வேறு வழிஇல்லாமல் சரி என்று சொல்லி அத்தையிடம் விட்டு சென்றாள்.



தனது அறைக்கு சென்ற கவிதாவால் ராஜசேகரனிடம் துளியும் பேச விருப்பம் இல்லை ஒன்றே ஒன்று பேசினாள் "எனக்கு ஒரு தனி அறை ஒதுக்கி தாருங்கள் நான் அங்கு இருக்கிறேன்" என்றாள் அவனுக்கு ஒன்றும் புரியவில்லை, இல்லை கவிதா வீட்டில் ஏதாவது நினைப்பார்கள் என்றான். கவிதா விடுவதாக இல்லை எனக்கு தனியாக இருக்க வேண்டும் என்றாள் சற்று கோவமாக............


அவன் அதை புரிந்து கொண்டவனாய்,
ஒகே கவிதா நீ இந்த அறையில் படுத்துக்கொள் நான் இதோடு சேர்ந்து இருக்கும் அடுத்த அறையை use பண்றேன் ஏதாவது தேவைனா இந்த கதவை தட்டு இரு அறைகளுக்கும் single door தான் என்று சொல்லிவிட்டு அங்கு சென்றான்.



கவிதா தூங்க மனமில்லாமல் நீண்ட யோசனையில் ஆழ்ந்தாள் இவன் எத்தனையோ பெண்களை ஏமாற்றிய பாவி இவன் கூட எப்படி நாம் கடைசி வரை வாழ்வது நான் எப்படியாவது இவன் இல்லாமல் வாழ்ந்து விடலாம் ஆனால் என் பிள்ளையின் வாழ்வு கேள்வி குறியாகி விடுமே ? அப்பா அம்மாவும் நம் மேல் நம் வாழ்க்கை மேல் மிகுந்த கவனம் வைத்திருக்கிறார்கள் அவர்களை ஏமாற்றமுடியுமா? இங்கு அத்தையும் நம் மேல் மிகுந்த நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். இப்படி எல்லாம் யோசித்துக்கொண்டிருந்தாள்.........................



ராஜாவோ நான் நம் பேமிலியோட கவிதாவ சேர்க்கலாம்னு நினச்சா அவ நம்மளையே வேணாம்னு சொல்லி ஒதுக்குறா இவ இப்டி இருக்கிறதுக்கு அவளை போய் திருமணம் செய்யாதது தான் காரணமா? இல்லை வேறு ஏதேனும் காரணம் உண்டா? என்று நினைத்துக்கொண்டிருந்தான்..........
கவிதாவிடம் பேசி அவள் மனதில் என்ன இருக்கிறது என்று அறியவேண்டும் அப்போதான் இதற்கு ஒரு முடிவு கிடைக்கும்.



கவிதாவுக்கு எப்படியாவது அந்த தாராவிடம் அவளிடம் பேசினால்தான் ராஜசேகரனைப்பற்றி தெளிவாக தெரிந்து கொள்ள முடியும் என்ற எண்ணம் வந்தது அதுமட்டுமில்லாமாமல் அத்தை கூட பேசி கொண்டிருக்கும் போது இங்கு வந்தது யாரென்றும் கண்டு பிடிக்க வேண்டும், கண்டிப்பாக இந்த வீட்டிற்குள் வந்தவர்கள் இவர்களுக்கு தெரிந்தவர்களாக தான் இருக்க வேண்டும் யாரென்று சீக்கிரம் கண்டு பிடிக்கவேண்டும்............................



கவிதாவுக்கோ வந்தவள் யாரென்று தெரியாது ஆனால் வந்தவளின் தோள்பட்டையில் ஒரு பெரிய அடையாளம் இருந்தது...............


கவிதாவை எப்படி சமாதானப்படுத்துவது எப்படி நம் குடும்பத்தோடு சேர்ப்பது என்று தெரியாமல் முளித்துக்கொண்டிருந்தான்......................



இவன் ஒரு அறையிலும் அவள் ஒரு அறையிலுமாக தனியே இவ்வாறு யோசித்துக்கொண்டிருந்தனர் ....................

எழுதியவர் : (13-Dec-13, 2:56 pm)
பார்வை : 244

மேலே