வளர் பிறை-13

அந்த இரவில் ஜெனி ஜோதிக்குள் ஐக்கியமானாள்,,,,,

பொழுது விடிந்தது,,,,,,, ஜோதிக்கு எதுவும் புரிவில்லை இரவில் நடந்ததெல்லாம் ஒரு கனவு போல வந்து போனது,,,,,,

மிக சாதரணமாக இருந்தாள்,,,,,, "என்ன இது வர வர கெட்ட கெட்ட கனவா வருது"- தனக்குள் பேசிக்கொண்டாள்


பள்ளிக்கு கிளம்பினாள்,,,,,,, வழியில் வந்தான் ரகு,,, ரகுவை கண்டதும் ஜோதி நன்கு அறிந்தவள் போல அவனை நிறுத்தினாள்,,,

"ரகு"- அவனை பெயரை உச்சரித்தாள் ஜோதி

"நான் தான்,,,யார் நீங்க??"-என்றான் ரகு

"ஜெ,,, ஜோதி"-ஜோதிக்குள் இருந்த ஜெனி பதிலளித்தாள்

"நான் உங்கள இதுக்கு முன்னாடி பார்த்ததே இல்லையே"

"நான் உங்கள பாத்துருக்கேன்"

"அப்படியா,,,,,, எங்க??"

அவனின் கேள்விக்கு புன்னகையையே பதிலாக தந்தாள் ஜோதி

அவனை பார்த்தவாறே நடக்க ஆரம்பித்தாள்,,,, ரகுவும் அவளை திரும்பி பார்த்தான்

இப்போதும் அவன் முகத்திலும் புன்னகை,,,,,,,
ஏன் ,,,,??? காலம் தான் பதில் சொல்லும்,,,,,,

இவர்களை உரையாடலையும் புன்னகையையும் தொலைவில் இரு விழிகள் பார்த்துக் கொண்டிருந்தது

அது ரகுவிற்கு தெரியவில்லை,,,,,,,,, தன் வழியே நடக்க ஆரம்பித்தான்

பள்ளி சென்றாள் ஜோதி,,,,,,,, அவளின் நாள் மிக சாதரணமாகவே சென்று கொண்டிருந்தது தினகரனை பார்க்கும் வரை

தினகரன் வந்தான் ஜோதிக்கு வகுப்புக்கு எடுக்க,,,
அவனை பார்த்தது முதல் ஜோதிக்கு உடல் முழுவதும் திராவகம் உற்றியது போல எரிந்தது

என்ன செய்ய??? யோசித்தாள்,,,,,, மெல்ல தன் முகத்தை மாற்றி கொண்டாள்,,,,,,


"யார் இன்னும் நோட் சப்மிட் பண்ணல"- கேட்டான் தினகரன்

எழுந்து நின்றாள்,,, ஜோதி

"ஏன் வைக்கல"

"இன்னும் முடிக்கல"

"ஏன்"

"இன்னைக்கு தான் முடிக்கணும்"

"ம்ம்ம்ம்ம் ஈவ்னிங் வந்து என்ன தனியா பாரு"- அவன் எண்ணம் வேறெங்கோ சென்றது

"சரி,,, அதுக்கு தான் நானும் வெயிட் பண்றேன்" - மனதிற்குள் சொல்லி கொண்டாள் ஜோதி

மாலை பள்ளி விட்ட பின்பு,

தனியாக இருந்த தினகரனை பார்க்க சென்றாள் ஜோதி

அவளின் கோபம் உட்ச்சத்தில் இருந்தது,,,,,,,,,,


(வளரும்,,,,,,,,,,,,,,,,,)

எழுதியவர் : நிலா மகள் (13-Dec-13, 11:30 am)
பார்வை : 160

மேலே