முள்ளின் மீது விழுந்த இலை 555

பாவையே...

என்னை நீ அழைக்க
மறுத்த போதும்...

உன்னை நான்
தவறாமல் அழைதேனடி...

என் அழைப்புகளை கண்டால்
எடுக்கவே மறுகிறாயடி...

உன்னிடம் நான் கேட்கும்
கேள்விகளுக்கு...

நானே பதில் சொல்லி
கொள்கிறேனடி...

உன்னிடம் வினவும்
விடையும் நானே...

பலமுறை கேட்டும்
பதில் தர மறுகிறாயடி...

ஒரே வார்த்தையில்
வைத்துவிட்டு போ என்கிராயடி...

என்னிடத்தில்...

மண்ணில் விழுந்த
உன் தாவணியை போல...

உதறிவிட்டு
செல்கிராயடி...

நானோ முள்ளில்
விழுந்த இலையை போல...

நான் இன்று
துடிகிறேனடி கண்ணே...

உன்னை தொடரவும்
முடியாமல்...

விலகவும் முடியாமல்
இந்த வினாக்களுடன்...

செல்வேனடி என் போராட்ட
வாழ்கையை நோக்கி நான்.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (14-Dec-13, 3:08 pm)
பார்வை : 206

மேலே