காதலர்களால் வருத்தப்படும் காதல்
காதல் காதல்
என்று சொல்லி
இன்னும் ஏன்
காதல் என்னும்
புனிதமான வார்த்தையை
கலங்கப் படுத்துகிறீர்!
காதல்,
உண்மையானது...
உணர்வு பூர்வமானது
மனதை
கவர்வது மட்டுமே
காதல் அல்ல,
தங்களின்
எண்ணங்களை
பறிமாறிக்கொள்ளாமலே
உணர்வுபூர்வமாக
உணர்வது தான்
காதல்.....
இந்த பறிமாறல்கள்
இல்லாததால் தான்
என்னை
காகிதம் போல்
கசக்குகிறார்கள்
இப்படிக்கு
காதலர்களால்,
வருத்தப்படும்
காதல்.....