நீயே கொன்றுவிடு
உன்னால் என் இதழ்கள்
சிதறிய புன்னகையை விட
உன்னை எண்ணி என்
கண்கள் சிந்திய கண்ணீர்
துளிகளே அதிகம்....
வலியை தாங்கவும் முடியாமல்
வலியால் வாழவும் தெரியாமல்
நித்தமும் உன் நினைவுகளால்
தினம் தினம் மரணிக்கும் என்னை
நீயே கொன்று விடு...
பாவம் என் இதயம்
துடிப்பதையாவது நிறுத்தட்டும்...