இளைஞனே

இருக்கும் கால்களை
எண்ணி பாராமல்
இல்லா சிறகுகளுக்காக
இளைத்து போகிறாய்!

இருக்கும் திறமைகளை
வெளிச்சத்திற் கொணராமல்
இல்லா அதிர்ஷ்டதிற்காக
இருட்டில் முடங்குகிறாய்!

இருக்கும் வாய்ப்புகளை
இழந்து கொண்டு
இல்லா சந்தர்பத்திற்காக
ஏமாற்றம் அடைகிறாய்!

பொழிந்தால் மழை!
கொட்டினால் அருவி!
பாய்ந்தால் ஆறு!
தேங்கி விடாதே! இளைஞனே!

கப்பலே கவிழ்ந்தாலும்
கரங்கள் இருக்கிறது
உன் வசம்...
உழைப்பை நீ
உடுத்திக்கொள் !
கரையேறி விடுவாய் நாளை!

எழுதியவர் : சௌம்யா தினேஷ் (16-Dec-13, 9:53 pm)
Tanglish : ilainyane
பார்வை : 96

மேலே