Sci-Fi காதல்

அன்பே உன் அழகை ஆராய அறிவியலும் தடுமாறும்
விஞ்ஞானமும் படபடக்கும்!
உன்னை கண்ட எந்திரனும் என் எதிரி ஆவான்!
ஏவுகணையும் என் நெஞ்சை தாக்கும்!
அணுகுண்டும் என் ஆயுள் அடக்கும்!
நீ சிரிக்கும் வேளையில் விண்கலமும் உன்னை படம் எடுக்கும்!
நீ உறங்கும் வேளையில் சந்திரனும் விழித்திருக்கும்!
நீ விழிக்கும் வேளையில் சூரியனுக்கும் உயிர் பிறக்கும்!
நாம் இருவரும் சேர்ந்தபின் அந்த oxygenum மூச்சு வாங்கும்!
cyanide ம் suicide செய்யும்!
அமிலமும் தேனாகும்!
போக்ரானும் மலர் தூவும்!
அன்பே இதை கடந்து நம் காதல் விண்ணை தாண்டும்...!!