தியாகம்-4
வணக்கம் வாசகர்களே!
அதிக இடைவெளி விட காரணம், என் தங்கை கல்யாணமும்,என் புது வீடு Iகிரகபிரவேசம் வேலை காரணமாகவும் தான்., குடும்ப தலைவி என்றாலே அப்படி தானே! சரி, தொடருவோமா தியாகத்தை.,
கதையின் நாயகி பாரதி..................
பாரதி பெயருக்கு ஏற்றார் போலே,புதுமை பெண்.,
அழகு தேவதை.,சரியான உயரம்,எடை, பார்ப்பவர் கண்ணை கவரும் வகையான தோற்றம்.,
வசிகரிக்கும் கண்.,இவளை பார்த்தவள் யாரும் காதலில் விழாமல் போவது இல்லை., காவியன், தன் மகளை அவளுக்கே தெரியாமல் ரசிப்பது உண்டு!
பாரதி----ஒரு புரட்சி பெண்., தவறென்றால், தட்டி கேட்காமல் விட மாட்டாள்.,சரியென்று நினைப்பதை ஒரு போதும் செய்யாமல் விட மாட்டாள்., சில நேரங்களில் தன் பெற்றோரின் பேச்சை,தவறென்று தயங்காமல் கூறுவாள்., அது காவியனுக்கு பல நேரங்களில் பிடிக்காமல் போகும்., பாரதி பேசுவது சரி தான் என்றாலும் , தந்தையை எதிர்ப்பது தவறு தானே என்று கூட காவியனுக்கு தோன்றும்.,
பாரதி., இன்று கல்லூரி கால பட்டாம்பூச்சி.,
தன் இரு வருட படிப்பில் நல்ல மதிப்பெண் பெற்றும், தன் கவிதை எழுதும் திறமையினாலும் , கல்லூரியில் அனைவரிடமும் நன்மதிப்பை பெற்றவள்.,
இந்த இருவருடத்தில் படிப்பு போலவே.,தன் மனம் கவர்ந்த காதலனையும்.,காதலையும் நன்றாகவே புரிந்து கொண்டாள்.,படிப்பையும், காதலையும்,நன்றாகவே ஈடு கட்டினாள்.,
காதலன் மதன்,அதே கல்லூரியில் மேல்நிலை பட்டபடிப்பு படிப்பவன்.,நல்ல உயரம்.,மாநிறம். அழகு என்பதை விட அவன் மனதோ மிகவும் பளிங்கு போன்றது, இரக்க குணம்,மனிதாபிமானம், உதவும் குணம், துறுதுறுப்பு,மற்ற பெண்களை நிமிர்ந்து பார்க்காத தன்மை என,இதெல்லாம் தான் மதனை பாரதிக்கு பிடிக்க காரணமாகிற்று.,
காவியநிடத்தில், அனைத்தையும் சுதந்திரமாக பேசுபவள்,ஏனோ காதல் விசயத்தில் மட்டும் பேச்சையோ,மூச்சையோ,கூட வெளிக்காட்ட மாட்டாள்.,காவியன் காதல் விசயத்தில் பயங்கர கறார்.,
இதனை மீறி காதல் மலர்ந்தது எவ்வாறு? இன்று வரை காதல் எப்படி இருக்கிறது?
தொடருவோமே ---- அடுத்த அத்தியாயத்தில்.,..............