நட்பின் தாகம்
என் ஆயுள் காலம் முக்கா
அது உனக்காக என் மக்கா..!
நான் மட்டை எடுத்தும் உன்னால்...
மட்டை ஆனதும் உன்னால்..!
என் ஆயுள் புத்தகத்தில் நீ இல்லா வரிகள் முத்துக்கள்... அனால் நீ இருக்கும் வரிகளே என் சொர்க்கம்..!
பெண்ணிடம் உண்டு ஈர்ப்பு...
உன்னிடம் உண்டு என்னவோ தேடி திரிகிறேன்...!
நான் துவண்டாள் நீ துடிப்பாய்...
என் இதய துடிப்பும் அதில் தோற்கும்..!
காதல் ஒரு அசைவம் அதற்கும் உண்டு ஒரு நாள் தடை..
நட்போ ஒரு சைவம் அதன் நம் வாழ்கயின் நிரந்தரம்...!
என் குளம் ஒரு கடல் என்றாலும்...
தாங்கி நிற்பேன் உன் நட்பை நங்கூரம் போல்..
நம்மை பிரிக்க நெனைக்கும் மின்சாரத்திற்கும் தூக்கியடிக்கும்..!
நம் நட்புக்கு மோட்டாரும் புகை இடும்...
வீட்டாரும் முறை இடும்..!
காலங்கள் கடந்தாலும் என் வரலாற்றின் மறுபக்கம் நீ...!