நடைபயணம்

விமானத்தில் பயணித்த
===முதல் பயணம்
தொடர்வண்டியில் சென்ற
===சிக்குபுக்கு பயணம்
சொகுசு வாகனத்தில் சென்ற
===மகிழ்ச்சிப்பயணம்
பேருந்தில் சென்ற
===தொலைதூர பயணம்
மோட்டார் வண்டியில் சென்ற
===விரைவுப் பயணம்
அத்துனை பயணத்தையும்
===தோற்கடித்து
அழகும் ஆனந்தமும் தந்தது
எல்லைகள் இல்லாமல் நீளாதோ
என்று எதையும் எண்ணாமல்
நண்பனோடு பேசியபடி சென்ற
=====நடைபயணம்=====