பழமைத்தமிழ்

நாதாரி:

நாதார்ன்னா - ஏழ்மை, பொய்த்துப் போன வெள்ளாமைக்குச் சொந்தமான நிலம்ங்றது அர்த்தம். இந்த மாதிரியான நிலத்தின் காரணமா உண்டாகுற வரி பாக்கிய நாதார்பாக்கின்னு சொல்லுவாங்க. அந்த ஏழ்மையான ஆசாமி, நாதாரி..!!

நாதாரி என்ற சௌராஷ்டிர சொல்லுக்கு தமிழில் தறுதலை என்ற அர்த்தம்

பன்னாடை:

தென்னை மரத்துல, பாளைகளக் காப்பாத்துற வலை நார்,அது பொதுவா எதுக்கும் உதவாது..அதே மாதிரி எதுக்கும் உதவாத ஆள பன்னாடை'ன்னு திட்றது வழக்கமாயிடுச்சு..!!

கேப்புமாரி:

இது செங்கல்பட்டு தென்னாற்காடு மாவட்டத்துல அந்த காலத்துல இருந்த, திருட்டும் தப்புத் தண்டா செய்யுற ஒரு கூட்டத்தோட பேருங்ளாம். அதுவே மருவி கேப்மாரி ஆயிடுச்சு..
கேப்புமாரி (p. 292) [ kēppumāri ] , s. (for.) a knave, a rogue; 2. a crimainal caste in South Arcot & Chengleput districts.

தெள்ள‌வாரி:

தள்ளவாரி ( தள்ளமாறி) தான் தெள்ளவாரி ஆகியது.வாக்கு/பேச்சுகளில் தெளிவில்லாமல் பேசுபவர்களை தெள்ளவாரி என்றலைக்கபட்டனர்..!!

ஆதாரம்: கட்சி மாறிய தம்பி வீடணனைஇராவணன் தள்ளவாரி என்றழைப்பதாகச்சொல்கிறார்.
யுத்த காண்டம்9. ஒற்றுக் கேள்விப் படலம்ஒற்றர் வருகையும், இராவணன் அவர்களை வரவழைத்துச் செய்தி கேட்டலும் (56)

எழுதியவர் : படித்ததில் பிடிப்பு (17-Dec-13, 7:45 pm)
பார்வை : 158

மேலே