என்னிடம் எதற்கு

காமராஜர் முதல்வராகப் பதவியேற்ற பிறகும் அவரது வாழ்க்கைத் தரத்தில் பெரிய மாறுதல் ஏதும் ஏற்படவில்லை .அதே பழைய வீடுதான்.அதே எளிய வாழ்க்கைதான்.அதே முக்கால் கை கதர்ச் சட்டைதான். சட்டைப் பை பெரியதாக இருக்கும். ஆனால்..ஒரு பர்ஸ் கூட வைத்துக் கொள்ளமாட்டார். ஒரு பவுண்டன் பேனா கூட வைத்துக் கொள்ள மாட்டார். நேரம் பார்க்க ஒரு ரிஸ்ட் வாட்ச் கூட கட்டிக் கொள்ளவில்லை.

''இப்படி கைக் கடிகாரம்கூட இல்லாமல் இருக்கிறீர்களே ..எப்போதாவது நேரம் தெரிய வேண்டுமென்றால் என்ன செய்வீர்கள்? என்று அவரிடம் கேட்டேன்.''

''கடிகாரம் எதற்கு?யாரைக் கேட்டாலும் நேரம் சொல்றாங்க!'' என்றார்..

''முதல் மந்திரிப் பதவியில் இருப்பதற்காக சம்பளம் வாங்குகிறீர்களே ...அந்த பணத்தை என்ன செய்கிறீர்கள்? என்று கேட்டேன் ..

காங்கிரஸ் வேலையாக டெல்லி போய்வந்தால் நானேதான் பிளைட் டிக்கெட் வாங்கிக் கொள்வேன். தாயாருக்கு மாதம் 100 அல்லது 150 செலவுக்குக் கொடுப்பேன். அப்புறம் ஏது என்னிடம் பணம்?..என்றார் காமராஜர்..

இந்த உரையாடல் மூலம் நாம் தெரிந்துகொள்வது அவரின் பெருந்தன்மையைப் பாராட்டாமல் இருக்க முடியாது..

இன்று தலைவர்களின் நிலை எப்படி?

சாவி எழுதிய ''சிவகாமியின் செல்வன்'' நூலிலிருந்து...

எழுதியவர் : தயா (17-Dec-13, 9:45 pm)
Tanglish : ennidam etharkku
பார்வை : 198

சிறந்த கட்டுரைகள்

மேலே