பலன் உண்டு

தலை முதல், பாதம் வரை
முடி வளர , அழகு படுத்த
விதம் விதமாய்
பூச்சுக்கள் .களிம்புகள்.

வாங்கி உபயோகப்படுத்த
அலங்காரமாய், விளம்பரங்கள்,
தொலைகாட்சியில், நாளிதழில்.

விலையும் குறைவென்றும்
பலன் உடன் என்றும்
நம்பிக்கை வாசகங்கள். .

அத்தனையும் வாங்கியவர் யாரும்உண்டோ ?
வாங்கியவர் பெற்ற பலன் தான் என்ன ?
அறிந்தவர் யாருமில்லை .

சொட்டை தலையில் தலைமுடி வளர,
உதிரும் முடி உதிராமல் இருக்க,
கருப்பு நிறம் மாறி சிவப்பழகு பெற,
தின்று கொழுத்த
தொப்பையும் குண்டும் குறைய,
பாதத்தில் பித்த வெடிப்பு நீங்க ,

இவையெல்லாம் பெற
ஒரு முறை உபயோகம் மட்டும் பத்தாது
வாழ்நாள் முழுதும் உபயோகிக்கவேண்டும்
பலன் நிச்சயமாய் கிடைக்கும்
அனைத்தையும் தயாரித்தவனுக்கு

எழுதியவர் : arsm1952 (18-Dec-13, 1:35 pm)
Tanglish : palan undu
பார்வை : 329

மேலே