கைபேசியும் குழந்தையும்

என் தாய்க்கு
நானென்றால் ரொம்பவும் பிரியம்!
என் குரல்
எங்கு கேட்பினும்
ஓடோடி வருவாள்!
என்னை தூக்கி கொள்வாள்!
வெளியில் செல்லும் நேரம் என்றால்
அவசரம் ஆயினும் மறவாள் - என்னை
தொங்கும் தூளிதனில்
தாங்கி கொள்வாள்!
தேவையென்றால் நான்
பயணித்து கொண்டிருகிறாள் என்று கூட
பாராமல் - சைக்கிள் மிதிக்கும் அவளை
இம்சிக்க தொடங்கி விடுவேன்!
சிறுது சிறிதாக குரலெடுத்து
பின் கத்தவே தொடங்குவேன்!
எனக்கு பயந்து அம்மாவும் - சாலையோரம்
வருவாள் - என்னை
கொஞ்ச தொடங்குவாள் !
ஏனோ ! என்னை பார்த்து
பொறாமை கொள்கிறது !
வேலைக்காரியிடம் வளரும் அவள் குழந்தை!
தானும் என்னை போல்
கைபேசியாக பிறந்திருக்க
கூடாதா என்று!!

எழுதியவர் : சௌம்யா தினேஷ் (18-Dec-13, 9:47 pm)
பார்வை : 135

மேலே