உன் நினைவில் நான்
அன்பே நான் உன்னை வெறுக்கிறேன்
உன்னை எண்ணி எண்ணி விம்மும் ஆழ்மனதுக்கு ஆறுதல் சொல்ல வேண்டாம்...!!!
இன்னும் ஏதேனும் மிச்சமிருந்தால் சொல்...துடிக்கும் இதயம் அதன் துடிப்பை நிறுத்தும் வரை ...!!!
நான் நேசித்த நொடி ஒவ்வொன்றும் உனக்கு பொய்யாகி போனதால் பிரிவினை தந்து என்னை விட்டு விலகிச் சென்று விட்டாய்...!!!
பிரிந்து சென்றாலும் உன் நினைவில் நான் வாழ்கிறேன் உன் நினைவிலே சாகிறேன்...!!!
மௌனமே...!! என் மரணம் கூட உன் மடியில் நிகழட்டும்...!

